/indian-express-tamil/media/media_files/2025/04/29/4Uo7Dw4yeDgMAXJjfezT.jpg)
Travel sickness remedies
பஸ், கார், பைக் என்று எந்தப் பயணம் என்றாலும் அய்யோ டிராவலா, எனக்கு செட்டே ஆகாது. வாந்தி வரும், மயக்கம் வரும், குமட்டல் வரும் என்று ஓடுபவர்களை பார்க்கலாம். குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும்போது, ஒருவர் மட்டும் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் மொத்த டூர் அனுபவமும் பாதிக்கப்படும்..
டிராவல் சிக்னெஸ் அல்லது மோஷன் சிக்னெஸ் எனப்படும் இந்தப் பிரச்னை, நிறைய பேருக்கு இருக்கிறது.
உங்களுக்கும் சரி, உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாருக்காவது பயணத்தின்போது குமட்டல், வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்படுமா? அப்படியென்றால், இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அந்த அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்:
தொலைவில் கவனத்தை செலுத்துங்கள்: பேருந்து, கார் போன்ற வாகனங்களில் பயணிக்கும்போது, கண்ணுக்கு அருகில் தெரியும் வேகமாக நகரும் பொருட்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக, தூரத்தில் இருக்கும் நிலையான பொருட்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால், கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பதும், படுத்தவாக்கில் பயணம் செய்வதும் பயண உபாதையின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும்.
முன்புற இருக்கையை தேர்ந்தெடுங்கள்: பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், பின் இருக்கைகளில் அமர்வதைத் தவிர்த்து, வாகனத்தின் முன்பகுதியில் உள்ள இருக்கைகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், முன்பகுதியில் அதிர்வுகள் குறைவாக இருக்கும்.
சரியான உணவு அவசியம்: வெறும் வயிற்றில் பயணம் செய்வது வாந்தி உணர்வை அதிகமாக்கும். எனவே, பயணங்களுக்கு முன் அல்லது பயணத்தின்போது லேசான மற்றும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
திரை பார்ப்பதை தவிருங்கள்: பயணத்தின்போது புத்தகம் படிப்பது, கைபேசியில் விளையாடுவது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். இதுவும் பயண உபாதையை அதிகமாக்கலாம்.
காற்றோட்டமான சூழலை நாடுங்கள்: ரயில், பேருந்து அல்லது காரில் ஏசி வசதியுடன் பயணம் செய்வது சிலருக்கு உபாதையை அதிகரிக்கலாம். முடிந்தவரை இயற்கையான காற்றோட்டத்தை விரும்பலாம். காதுகளை பஞ்சினால் அடைத்துக்கொண்டு உறங்குவது போன்ற நிலைகளில் பயணிப்பதும் இந்த அசௌகரியத்தைக் குறைக்க உதவும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, இனி உங்கள் பயணங்களை மிகவும் இனிமையானதாக மாற்றிக்கொள்ளலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.