டிராவலில் வாந்தி வருவது ஏன்? இதை செய்யாமல் இருந்தால்போதும்; டாக்டர் விஜி

பயணத்தின்போது ஏற்படும் வாந்தி உணர்வு பலருக்கு பெரும் சங்கடமாக அமைகிறது. குறிப்பாக பேருந்து (அ) காரில் செல்லும்போது ஏற்படும் இந்த அசெளகரியம், பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும்.

பயணத்தின்போது ஏற்படும் வாந்தி உணர்வு பலருக்கு பெரும் சங்கடமாக அமைகிறது. குறிப்பாக பேருந்து (அ) காரில் செல்லும்போது ஏற்படும் இந்த அசெளகரியம், பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும்.

author-image
WebDesk
New Update
Travel Sickness

டிராவலில் வாந்தி வருவது ஏன்? இதை செய்யாமல் இருந்தால்போதும்; டாக்டர் விஜி

பயணத்தின்போது ஏற்படும் வாந்தி உணர்வு பலருக்கு பெரும் சங்கடமாக அமைகிறது. குறிப்பாக பேருந்து (அ) காரில் செல்லும்போது ஏற்படும் இந்த அசெளகரியம், பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். இந்த வாந்தி உணர்வு ஏன் ஏற்படுகிறது? அதை எப்படித் தடுப்பது? என்பது குறித்து டாக்டர் விஜி கூறும் தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

ஏன் வாந்தி உணர்வு ஏற்படுகிறது?

வாகனத்தில் பயணம் செய்யும்போது, நமது உடல் முன்னோக்கி நகர்கிறது. ஆனால், நாம் பார்க்கும் காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. இந்த முரண்பாடு நமது மூளைக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, இரைப்பை அழற்சி (gastritis), வயிறு வீக்கம் (bloated abdomen) போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வாந்தி உணர்வு தூண்டப்படுகிறது.

பயணத்தின்போது வாந்தி உணர்வைத் தடுக்க சில எளிய வழிகள்:

Advertisment
Advertisements

கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யும்போது, முடிந்தவரை நேராக அமர்ந்து, பக்கவாட்டில் நகரும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இது மூளைக்கு ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கும். பயணத்தின்போது சக பயணிகளுடன் பேசுவது அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதை ஈடுபடுத்துவது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இது வாந்தி உணர்வில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும். பயணத்திற்கு முன்பும், பயணத்தின்போதும் பச்சை ஆப்பிள்களைச் சாப்பிடுவது வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்த உதவும். பச்சை ஆப்பிள்களில் அதிக அளவில் பெக்டின் (pectin) சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி, வாந்தி உணர்வைக் குறைக்கிறது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை பச்சை ஆப்பிளை மென்று சாப்பிடுவது நல்ல பலன் தரும் என்கிறார் டாக்டர் விஜி.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: