உங்களுக்கு தெரியாத நாட்டில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் குழம்பி நிற்பது நல்லது கிடையாது.
நாம் பயணங்கள் செய்ய தயாராகும்போது, சில பொருட்களை எடுத்து வைப்பதற்கு மறந்துவிடுவது போன்ற சில தவறுகளை செய்துவிடுகிறோம். அதிலிருந்து நாம் சில விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். ஒரு விஷயம் உங்கள் நாட்டிற்குள் சுற்றுலா செல்லும்போது நடக்கும். வேறு ஒன்று உங்கள் சர்வதேச சுற்றுலாவை பாதிக்கும். மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது சில பொதுவான தவறுகளை செய்து விடுவார்கள். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். கையறு நிலையில்விடும். உங்களுக்கு தெரியாத நாட்டில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் குழம்பி நிற்பது நல்லது கிடையாது. எனவே அடுத்தமுறை நீங்கள் செல்வதற்கு முன்னர், நீங்கள் ஒரு முன் தயாரிப்பை செய்துகொண்டு, அதன்படி திட்டமிடுங்கள். எனவே இதுபோன்ற சிறு தவறுகள் செய்வதை நீங்கள் தவிர்க்கலாம். இதோ உங்கள் சிரமத்தை குறைக்க சில டிப்ஸ்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அதிக சுமை : இது மிக பொதுவான தவறு. ஏனெனில் உங்களுக்கு என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். எனவே நீங்கள் கையில் கிடைத்ததையெல்லாம் பெட்டியில் அடைபீர்கள். இதை எப்போதும் செய்துவிடாதீர்கள். புத்திசாலித்தனமாக, தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச்செல்லுங்கள். அப்போது தான் நீங்கள் அங்கு ஏதேனும் பொருட்களை வாங்கினால், உங்களுக்கு அவற்றை வைத்துக்கொள்வதற்கு இடம் இருக்கும்.
பாஸ்போர்ட் காலாவதி
ஒவ்வொரு பாஸ்போர்ட்டிற்கும் காலாவதி தேதி உண்டு. அந்த தேதி வரை உங்கள் பயணங்களை வைத்துக்கொள்ளாதீர்கள். தேவையானபோது புதுப்பித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள் என்றால், பயண நாட்களுக்கும், காலாவதி தேதிக்கும் சிறிது கால அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் விசாவும், அதைப்பொறுத்தே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிட ஆவண வேலைகள் உங்களை பதைபதைப்பில் ஆழ்த்தும். பாஸ்போட்டை புதுப்பிக்க நினைத்தாலும் அல்லது தற்காலிகமான ஒன்றை எடுக்க நினைத்தாலும், உங்களுக்கு போதிய அவகாசம் தேவை.
இணைப்பு விமானம்
நீங்கள் இணைப்பு விமானங்களில் செல்ல திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால், அதிக நேரம் இருக்கும்போது இணைப்பு விமானத்தை பயன்படுத்துங்கள். ஒரு விமானத்தில் இருந்து இறங்கி, உங்கள் லக்கேஜ்களை சேகரித்துக்கொண்டு, அடுத்த விமானம் ஏற தயாராக வேண்டும். அடுத்து விமானம் வரும் வரை காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அடுத்த விமானம் தாமதமாகக்கூட வரலாம். அப்போது ஒரு மணி நேரம் கூட மிக நீண்ட நேரமாக தோன்றும். பல முனையங்களை கடந்து அடுத்த விமானத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே, இணைப்பு விமானங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் கவனமாக யோசித்து முடிவெடுங்கள்.
சர்வதேச மொபைல்போன் டேட்டா வசதி
நீங்கள் சர்வதேச எல்லைகளை கடக்கும்போது, நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். எனவே ரோமிங்குடன் கூடிய டேட்டா வசதிகள் குறித்த திட்டங்கள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் சேவையாளர் உங்களுக்கு வழங்கும் பில்லைப்பொறுத்து, நீங்கள் உள்ளூர் சிம் கார்ட் வாங்கவேண்டுமா அல்லது வைபையில் தொடர்பில் இருக்கலாமா என்பது குறித்து திட்டமிடுங்கள்.
ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதை புரிந்துகொள்வது
ஒரு நாட்டிற்கு நீங்கள் பயணம் செய்யும்போது, அந்நாட்டின் நாணயம் மற்றும் அதை மாற்றுவதற்கான விலை ஆகியவை குறித்து நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளாமல் அந்த நாட்டிற்கு செல்லவே முடியாது. இவற்றையெல்லாம் நீங்கள் தெளிவாக செய்துவிட்டாலே போதும். நீங்கள் தைரியமாக விமானம் ஏறலாம். அங்கு போய் என்ன? எப்படி? என்று குழம்ப வேண்டிய அவசியமில்லை. இனிய பயண வாழ்த்துக்கள்!!!
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil