இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது பிரசவ தேதி நெருங்கி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட்கோலி, தற்போது தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.
சமூக வளைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் கோலி – அனுஷ்கா தம்பதி, தங்களது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது பிரசவ தேதி நெருங்கி வருவதை பொருட்படுத்தாத அனுஷ்கா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் செய்யும் தினசரி விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இதில் தற்போது டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு தளர்வான ஒயிட் ட்ரெஸ்ஸை அணிந்திருக்கும் அனுஷ்கா அதனுடன் பிளாக் கலர் ஜிம் பேன்ட் மற்றும் ஸ்னீக்கர்களுடன் டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்துகொண்டுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தை வர கொஞ்சம் நாட்களே இருப்பதை மகிழ்ச்சியுடன் விளிப்படுத்திய அனுஷ்கா சர்மா, இந்த அறிவிப்புக்கு பிறகு, நாள்தோறும் தனது மகிழ்ச்சியான புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
இதில் ஒரு புகைப்படத்தில், அவர் தனது கணவரின் உதவியுடன் தலைகீழாக யோகா செய்யும் போட்டோவும் வெளியாகியுள்ளது. கர்ப்பத்திற்கு முன்னரே தான் யோகா செய்வதால் இப்போதும் தொடர்ந்து யோகா செய்ய தனது மருத்துவர் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Treadmill training anushka new video going viral
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்