தமிழக வனப் பகுதியில் 40 இடங்களில் பொது மக்கள் (ட்ரெக்கிங்) மலையேற்றம் செய்யும் வகையில் ட்ரெக் தமிழ்நாடு என்ற திட்டம் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதற்கு பதிவு செய்ய பிரத்யேக வைப்சைட் www.trektamilnadu.com என்ற இணையதளமும், திட்டத்தின லோகோவையும் அவர் அறிமுகம் செய்தார்.
தமிழக வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் ஆகியவை இணைத்து ட்ரெக் தமிழ்நாடு திட்டதை கொண்டுவந்துள்ளன. இந்த துறைகளை மலையேற்ற பணிகளை ஒருங்கிணைப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உள்ளூர் சமூகங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கவும், காடு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நேரடியாக ஆன்லைனில் ட்ரெக்கிங் செல்ல முன்பதிவு செய்யலாம், அதே சமயம் 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர்/பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் முன்பதிவு செய்யலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எளிதாக செல்லும் மலையேற்ற இடங்களுக்கு மட்டும் பெற்றோருடன் அனுமதிக்கப்படுவர்.
முதல் கட்டமாக தொடங்கப்பட்ட 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்றப் பாதைகள், நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட 14 மாவட்டங்கள் மற்றும் 18 வனப் பிரிவுகள் ஆகும்.
50க்கும் மேற்பட்ட பழங்குடி/காடு எல்லை கிராமங்களில் இருந்து சுமார் 300 வழிகாட்டிகள் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் காடுகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆவர். அதோடு அவர்களுக்கு காட்டில் எப்படி இருக்க வேண்டும், முதலுதவி, சுகாதாரம், பாதுகாப்பு பயிற்சி போன்றவற்று வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மலையேற்றத்தில் ஈடுபடும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு காப்பீடு வழங்கவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“