க.சண்முகவடிவேல்
உலகம் முழுவதும் பரவி இருக்கும் மதங்களுள் கிறிஸ்துவ மதமும் ஒன்று. அன்பு மற்றும் கருணை இது இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு இந்த மதம் உலகம் முழுவதும் பரவப்பட்டது. இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையை தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஆன்மாவை தூய்மையாக்கும் மதமாக இது கருதப்படுகிறது.
கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதி அன்று கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைவனின் மகனாக பிறந்து வாழ்ந்து மக்களுக்கு அன்பு மற்றும் கருணையை கொடுத்து உயிர் நீத்து, அதன் பின்னர் உயிர்த்தெழுந்தவர் இயேசு கிறிஸ்து.
/indian-express-tamil/media/post_attachments/0ccc73c7-606.jpg)
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை உடலை விட்டு உயிர் பிரிவது மட்டும் முடிவு கிடையாது. அதுவே தொடக்கமாக கருதப்படுகிறது என்றும், அழிவில்லாமல் வாழ்வது ஆன்மா அதனை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிரிழந்த மூன்றாம் நாள் உயிர்ப்பித்து எழுந்தார். இறப்பு என்பது தொடக்கம் மட்டுமே என்பதை உணர்த்துவதே இதன் முக்கிய காரணமாகும். ஆன்மாவிற்கு போதும் அழிவு கிடையாது என்பதை உணர்த்துவதற்காகவே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்ததாக கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/ee3bd14d-e05.jpg)
அதற்காகவே இந்த கல்லறை திருநாளில் இறந்தவர்களுக்கு செபம் செய்து உலகம் முழுவதும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு என்றுமே அழிவு கிடையாது. இறப்புக்கு பின்னர் இறைவனிடம் அமைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே முக்கியமாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த கல்லறை திருநாள் அன்று இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று அதனை சுத்தப்படுத்தி மலர்களை தூவி மெழுகுவர்த்தி ஏற்றி செபம் செய்வது வழக்கமாகும்.
/indian-express-tamil/media/post_attachments/0fe75984-b68.jpg)
உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று முன்னோர்களை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுவதில் இந்த கல்லறை திருநாளாகும். அந்தவகையில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கல்லறைத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது தங்கள் முன்னோரின் கல்லறையை அலங்கரித்து ரோஜா மற்றும் பூக்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதுபத்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/a08fddc0-0d7.jpg)
அதேபோல், திருச்சி மாநகரில் உள்ள அரியமங்கலம், பொன்மலை, பாலக்கரை, கே.கே.நகர், திருவெறும்பூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், மெயின்கார்ட்டுகேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களில் அந்தந்த பகுதி பேராலய பங்கு தந்தைகள் தலைமையில் திருப்பலி நடத்தி தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறையில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/xoQN3WF1HWOIbjkTeaRQ.jpg)
இதேபோல், டெல்டா மாவட்டத்திற்குட்பட்ட, பூண்டி, தஞ்சை, குடந்தை, நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திருப்பலி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“