திருச்சி காவல்துறையில் இணைந்த காவேரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது குறித்து விவரம் வருமாறு;
தமிழக காவல்துறையில் கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Dabur Man என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு காவேரி என்று பெயரிடப்பட்டது.
இந்த மோப்ப நாய்க்கு கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 மே மாதம் வரை சென்னை பரங்கிமலை பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் குற்ற வழக்குகளை விரைவாக கண்டறிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா முன்னிலையில் திருச்சி மாநகர மோப்பநாய்படை பிரிவில், காவேரி பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“