/indian-express-tamil/media/media_files/2025/04/12/AozwhlN3dGkXk68Ll7Ki.jpg)
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்கம் எழுப்பி பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழாபிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறுவாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்.8-ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று 11-ம் தேதி நடைபெற்றது.
விழாவின் முக்கின கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் இன்று 12-ம்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலாவாக வந்து தேரில் அமர்ந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் பங்கு கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் ஆரவாரமாக தேரை வடம் பிடித்து வீதி உலாவாக இழுத்துச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.