/indian-express-tamil/media/media_files/2025/06/01/4fhnS9JHh9gDYbyXR9en.jpeg)
பொன்மலை ரயில்வே பணிமனையில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து 31.05.25 தேதி நேற்றுடன் கே.சி.நீலமேகம் என்ற ரயில்வே ஊழியர் பணி நிறைவு பெற்றார். கே.சி நீலமேகம் சார்பாக மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் ரயில்வே சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து பொன்மலை ரயில்வே அம்பேத்கர் திருமண மண்டபத்தில் 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் (CWM) சந்தோஷ் குமார் பட்ரோ, துணை முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் (Dy CME) சதீஷ் சரவணன், உதவி தொழிலாளர் நல அதிகாரி (APO) சுந்தரமூர்த்தி, ரயில்வே அதிகாரிகள் தர்மேந்திரா, ஸ்ரீதர், கண்ணன், திருச்சி மாவட்ட தடகள சங்க ரவிசங்கர், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா கி.சதீஸ் குமார், ஆர்.கே.ராஜா, மக்கள் சக்தி இயக்க வெங்கடேஷ், தயானந்த், மரம் பாலு, ரயில்வே நண்பர்கள் எஸ்.ஆர் இ.எஸ் எஸ்.ரகுபதி, பாலமுருகன், முகமது கோரி, ரியாஸ் அகமது, பெரியசாமி மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
பணி நிறைவு நாளில் தம்மால் முடிந்த அளவு அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டது குறித்து நீலமேகம் தெரிவிக்கையில்; ரயில்வேயில் 60 ஆண்டு கால பணி நிறைவு பெற்றது. பணியில் எந்தவித சமரசம் இன்றி செயல்பட்டதால் இன்று மன நிறைவுடன் பணி ஓய்வு பெறுகிறேன். இதுக்கு மேல் சமூக அக்கறையுடன் சமூக பணியாற்ற குழு அர்ப்பணிப்புடன் பயணிக்கின்றேன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காகத்தான் எனது பணி நிறைவு நாளில் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னை போல் பலரும் இதே போல் தங்களால் இயன்ற அளவு மரங்களை நட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.