திருச்சி பொன்மலைப்பட்டி சாமியார் ஸ்கூல் என்ற திரு இருதய மேல்நிலை பள்ளியில் 1985-86ம் ஆண்டுகளில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள், 38 ஆண்டுகளுக்கு பின் தாங்கள் பயின்ற பள்ளியில் கூடி, கல்வி பயிலும் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
திருச்சி பொன்மலைப்பட்டியில் 'சாமியார் ஸ்கூல்' என்றழைக்கப்படும் திரு இருதய மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1985-86ம் ஆண்டுகளில் ஒன்றாக கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்ட சந்திப்பு நிகழ்ச்சி 38 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்தது.
/indian-express-tamil/media/post_attachments/4f4db454-ffd.jpg)
இதில் கலந்து கொண்ட நண்பர்கள் ஒருவரை ஆரத்தழுவி, தங்கள் ஆழமான பாசத்தை வெளிப்படுத்தினர். 38 ஆண்டுகளில் தோற்றம் தொலைத்த மாணவர்கள் புதிய தோற்றத்தில் தங்கள் நண்பர்களை கண்டு, புதுவித உணர்ச்சியில் பூரித்தெழுந்தனர். கண்களில் கசிந்த நீரை புறங்கையால் துடைத்தபடி தங்கள் நண்பர்களில் கைகளை இறுக பற்றிக்கொண்டு தங்கள் பாசத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில், தம் பள்ளியின் வரலாறோடு இணைந்த பொன்மலை பணிமனை சிறப்புடன் செயல்படவும், பொன்மலை மற்றும் அதை சார்ந்த கிராமங்களை அதன் இளமையுடன் மீண்டும் பெறவும் அனைவரும் வரலாறு தெரிந்தவர்களோடு இணைவோம், பொன்மலையை காப்போம் என்ற மன உறுதியுடன் மீண்டும் சேர்வோம், அன்புடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் இணைவோம் என முன்னாள் மாணவர்கள் தீர்மானம் ஏற்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/50c26826-00c.jpg)
தென்னக ரயில்வே பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் படிக்க வைத்து சமூகத்தில் உயர்வான இடத்திற்கு செல்வதற்கு சாமியார் ஸ்கூல் ஒன்றே சரியான தீர்வாக அமைந்திருந்தது. நம்பிக்கை மிக்கவர்களாக இந்த சந்திக்கும் வாய்ப்பை அளித்த நண்பர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி என்றனர். உற்சாகமாக 38 ஆண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் ஒன்றுகூடி அளவலாவிய நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சி மிக்கதாக அமைந்தது.
இதில் அனைத்து முன்னாள் மாணவர்களும் கலந்துக் கொண்டு ஆசிரியர்களிடம் புகைப்படம், மற்றும் ஆசிர்வாதம் பெற்றார்கள்.
க.சண்முகவடிவேல்