/indian-express-tamil/media/media_files/2ZeVYWo3MItlwWxtuFCf.jpg)
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த வைத்தியநாதன் – தாரணி தம்பதி. இவர்களுக்கு ப்ரீதிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறார். ஒன்றரை வயதில் தனது அசாத்திய திறமையால் பொருட்களின் பெயரைச் சொன்னவுடன் அதனை படத்தில் உடனடியாக அடையாளம் காட்டும் திறன் கொண்டிருந்தார்.
ப்ரீதிகாவின் திறமையை அறிந்த அவரது பெற்றோர்கள், வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் நடத்திய உலக சாதனை போட்டியில் ப்ரீதிகாவை பங்கேற்க வைத்தனர். இதில் 11.56 நிமிடத்தில் 190 படங்களை அடையாளம் காட்டி அசத்தியுள்ளார். இதன் மூலம் அதிவேகத்தில் அடையாளம் காட்டக் கூடிய திறன் கொண்ட குழந்தையாக வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்ற குழந்தை ப்ரீதிகாவுக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
ஒரு வயது நான்கு மாதம் நிரம்பிய குழந்தை ப்ரிதிகா வைத்தியநாதன் அடுத்த சாதனையாக 40 வினாடிகளில் 50 மீட்டர் ஓட்டத்தை கடந்தார். இந்த சாதனையால் வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் ப்ரீதிகா 2வது முறையாக இடம் பிடித்தார். அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
நம்பர்ஸ், வண்ணங்கள், உடல் உறுப்புகள், உறவுமுறைகள் ஆகியவற்றை கூறும் திறன் கொண்ட குழந்தை ப்ரீதிகா "சூப்பர் டேலண்ட்டட் கிட்ஸ்" என்று இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற உலக சாதன புத்தகத்தில் இடம் பிடித்தார். மூன்று உலக சாதனை புத்தகத்தில் தனது அசாத்திய திறமையால் பெயரை பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளார். குழந்தையின் சாதனை குறித்து அவரது பெற்றோர் பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.