குடிநீர் குழாய்க்கு தோண்டியபோது நடந்த அதிசயம்... திருச்சி சமயபுரத்தில் துவாரபாலகர் கற்சிலை கண்டெடுப்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
trichy samayapuram mariamman Dvarapala Sculpture Discovered Tamil News

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

Advertisment

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 9 அடி உயரமும் 2 அடி அகலம் உள்ள பழமையான கற்சிலை ஒன்று தென்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கற்சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில் கோவில் நுழைவாயிலில் அமைக்கப்படும் துவாரபாலகர் கற்சிலை என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து இந்த கற்சிலையை மீட்டு தொல்லியல் துறையினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கற்சிலையை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

செய்தி:க.சண்முகவடிவேல்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: