தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, பிற நாடுகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக பிரதி மாதம் 3 முறை எண்ணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோயிலின் மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கை செலுத்தப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 65 லட்சத்து, 16 ஆயிரத்து, 762 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 578 கிராம் தங்கமும், 2 கிலோ 781 கிராம் வெள்ளியும், 99 அயல்நாட்டு நோட்டுகளும், 834 அயல்நாட்டு நாணயங்களும் காணிக்கையாக வரப்பெற்று உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டது.
உண்டியல் திறப்பின்போது சமயபுரம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், சமயபுரம் கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெ.பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன், மு.இரமணிகாந்தன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, கி.உமா, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பெரம்பலூர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், சமயபுரம் திருக்கோயில் ஆய்வாளர் நா.சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“