New Update
/
உறுப்பு தானம் என்பது மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பிரித்தெடுக்கப்படும் ஒரு செயல்முறையாகும். பின்னர் இந்த உறுப்புகள் நன்கொடையாளர் உயிருடன் இருக்கும்போது அல்லது நன்கொடையாளரின் குடும்பத்தின் அனுமதியுடன் இறந்த நிலையில், சட்டப்பூர்வமாக மற்றொரு தேவையுள்ள நபருக்கு மாற்றப்படும். இதன்மூலம், உடல் உறுப்பு தானம் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
அந்தவகையில், திருச்சி மாவட்டம் அமையபுரம் வட்டம் நல்லாம் பிள்ளை வெள்ளிவாடி கிராமம் சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர் ஸ்ரீரங்கன் என்பவர், கடந்த மாதம் 30.04.24 மூளைச்சாவு அடைந்து இறந்ததை அடுத்து அவரது உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர்.
இந்தநிலையில் உடலுறுப்பு தானம் செய்த அக்குடும்பத்தினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.ரா.சந்திரசேகர், ஆர்.கே.ராஜா, தமிழ் செம்மல் திருக்குறள் புலவர் நாவை சிவம், ஆர்.இளங்கோ உள்ளிட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை பாராட்டி, கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழும், நிதி உதவியும் வழங்கினர் .
இதுபோல கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்த 20- க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாக திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.