சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண் 181 ஆகியவை குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.
இந்த மாரத்தானை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, டி.வி.எஸ் டோல்கேட்டில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான், டோல்கேட்டில் தொடங்கி தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம், MGR சிலை ரவுண்டானா வழியாக Students Road-ல் முடிவுற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/03/08/6yIaCQt1PcJeYrLsEsrW.jpg)
இவ்விழாவில் கலந்து கொண்ட காவல் ஆணையர் ந.காமினி பேசுகையில், "இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் மகளிர் உதவி எண் 181-ஐ பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வை ஏற்பட்டுத்தும் வகையில் அமைந்தது. பெண்கள், தங்கள் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண் குறித்த தகவல்களை அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடன் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறினார்.
இந்த மாரத்தானில் மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள், பெண் அரசு ஊழியர்கள், பெண் ஊர்காவல் படையினர் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்