ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து வந்தார்.
மேலும், கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம், கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக்கைகளில் தாயத்து சரம், ரத்தின திருவடி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்.
இன்று மாலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி ஆகி மீண்டும் 9:00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார் நம்பெருமாள். முன்னதாக, தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் சற்று குறைந்த அளவாக காணப்பட்டது. இருந்த போதும், வட மாநில மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற பகல் பத்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை ரங்கா ரங்கா கோஷத்துடன் வரவேற்று வணங்கிச் சென்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.