திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு தாடங்கம் (தோடுகள்) நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
/indian-express-tamil/media/post_attachments/4904c54d-3a4.jpg)
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில், மூலவர் அம்மன் காதுகளில் ஆதிசங்கரர் பூஜித்து வழங்கிய தாடங்கங்கள் (தோடுகள்) பொருத்தப்பட்டுள்ளன. இத்தோடுகள் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் ஆகும். இத்தோடுகளை குறிப்பிட்ட காலத்தில் கழற்றி சுத்தம் செய்து, அதை அம்மனுக்கு மீண்டும் அணிவிப்பது வழக்கம். காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் இத் திருப்பணியை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/0e5fa377-e38.jpg)
அதன்படி, அம்மனின் தாடங்க பிரதிஷ்டை நேற்று (16.02.2025) நடந்தது. முன்னதாக, பிரதிஷ்டைக்கான யாகசாலை பூஜைகள் அம்மன் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் 13 ஆம் தேதி தொடங்கி நடந்தது. இந்த பூஜையில் அம்மனின் தாடங்கம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பெரும் யாகங்கள் நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவானைக்காவலில் முகாமிட்டு பூஜைகளை முன்னின்று நடத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/dd38d743-1f9.jpg)
இதைத் தொடர்ந்து, நேற்று (16.02.2025) யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு தாடங்கம், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/d57dc2b6-760.jpg)
முன்னதாக, 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் நேற்று முற்பகல் முதல் மதியம் வரை திருவானைக்காவல் காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சமுதாய காதணி விழாவில் பங்கேற்று, தங்கள் குழந்தைகளுக்கு காதணிகள் அணிவித்தனர். ஏற்கெனவே காதணி விழா நடத்தப்பட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசியுடன் பொற்கொல்லர்கள் மூலம் மீண்டும் காதணிகள் அணிந்துக்கொண்டனர். அவர்களுக்கு மடத்தின் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்