/tamil-ie/media/media_files/uploads/2021/09/edible-oil-1200.jpg)
நாம் அன்றாடம் உணவில் தவிர்க்கமுடியாமல் பயன்படுத்துவது எண்ணெய்தான். அவை சுத்தமாகவும் தரமானதாகவும் இருப்பது அவசியமாகும்.
சந்தையில் பலவகையான சமையல் எண்ணெய்கள் உள்ளன. அவற்றில், கலப்படம் இல்லாத எண்ணெய் எது என்பதை கண்டறிவது சவாலாகத் தான் உள்ளது. தற்போது, அதற்கான ஈஸி வழியை FSSAI தெரிவித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எண்ணெய்யில் உள்ள ட்ரை-ஆர்த்தோ-கிரேசில்-பாஸ்பேட் (TOCP) கலப்படத்தைச் சரிபார்க்க வீட்டில் செய்யக்கூடிய ஒரு எளிய சோதனையை விளக்கியுள்ளது.
1988 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான பெஹலா புரோஷிப்தலாவில் உள்ள கடை ஒன்றில், மலிவான ரசாயனமான TOCP கொண்ட ராப்சீட் எண்ணெய்யை விற்பனை செய்தது. இதை உபயோகித்த நுகர்வோர்களின் உடலில் நச்சுத் தன்மை பரவி பலருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது
இதுகுறித்து மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர், ‘Poison in the Frying Pan’என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, முதலில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, பக்கவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரை-ஆர்த்தோ-கிரெசில் பாஸ்பேட் ஒரு கலப்படம் ஆகும். இது சமையல் எண்ணெய்யைப் போன்ற நிறத்தில் உள்ளது. இது எண்ணெய்யில் கரையக்கூடியது மற்றும் சுவையை அதிகம் மாற்றாது.
எனவே, நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கலப்படமா என்பதை எப்படிச் சோதிக்கும் வழிமுறை இதோ…
Detecting Tri-ortho-cresyl-phosphate Adulteration in Oil.#DetectingFoodAdulterants_6#AzadiKaAmritMahotsav@jagograhakjago@mygovindia@MIB_India@PIB_India@MoHFW_INDIApic.twitter.com/YLRp7NzfEa
— FSSAI (@fssaiindia) September 15, 2021
step 1: ஒரு கிண்ணத்தில் 2 ml எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்
step 2: அதில், சிறிய மஞ்சள் வெண்ணெய் சேர்க்கவும்
கலப்படமற்ற எண்ணெய் நிற மாறாமல் இருக்கும். அதே சமயம், எண்ணெய் கலப்படமாக இருந்தால், உடனடியாக நிறம் மாறி சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.
இந்த எளிய வழிமுறை மூலம் உங்கள் வீட்டில் உள்ள எண்ணெய் கலப்படமா இல்லையா என்பதைச் சோதித்துப் பாருங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.