இந்தி நடிகைகள் பார்டி மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்லும்போது கருப்பு நிறத்தை தேர்வு செய்கிறார்கள்.
பொதுவாக கருப்பு நிறத்தை அதிகமாக யாரும் தேர்வு செய்வதில்லை. ஆனால் தற்போது டிரெண்ட் மாறி உள்ளது. குறிப்பாக ஆடை வடிமைப்பாளர்கள் கருப்பைதான் அதிகம் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் கருப்பு நிறத்தில் ஆடைகளை தேர்வு செய்கிறார்கள்.
சமீபத்தில் கியரா அத்வானி, கருப்பு நிறத்தில் கவுன் அணிந்துள்ளார். அதற்கு கையில் ஸ்நேக் வடிவில் பிரேஸ்லேட் அணிந்துள்ளார். இது ஸ்டாப்லெஸ் கவுன். இதற்கு சாதரண நியூட் ரெட் லிப்டிக் பயன்படுத்தி உள்ளார். கண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து மேக் ஆப் அணிந்துள்ளார்.
இதுபோல குஷி கபூர், பிளாக் கவுனில் மிகவும் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த உடையில் இடுப்பின் பக்கம் கட்சிதமாக தைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு வைரத்தில் சிறிய ஜெயின் அணிந்திருந்தார். இதற்கு ஏற்றவாறு காதில் கம்மல் அணிந்திருந்தார்.
உலக அழகி பட்டத்தை 2017ம் ஆண்டு வென்ற இவர் கருப்பு நிற உடையில் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த உடையை ராகுல் கண்ணா, ரோகித் காந்தி ஆகியோர் வடிவமைத்துள்ளனர். பிங்க் நிறத்தில் லிப் ஸ்டிக்கை அணிந்திருந்தார்.
இதுபோல அனிமல் படம் மூலம் அனைவரின் மனதில் இடம்பிடித்த டிரிப்டி டிம்ரி, கருப்பு உடையில் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார். இவர் அழகான கம்மலை அணிந்துள்ளார். கருப்பு நிறத்தில் சிறிய பர்ஸ் வைத்துள்ளார்.