வண்ணங்களை உணர்ந்து வேறுபடுத்தும் திறன் மனித பார்வையின் ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகும், ஆனால் இந்த விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆண்களை விட பெண்களால் அதிக வண்ணங்களைப் பார்க்க முடியும், இதற்குக் காரணம், நிறத்தை நாம் எவ்வாறு கண்டறிகிறோம் என்பதை தீர்மானிக்கும் மரபணுக்கள் X குரோமோசோமில் அமைந்துள்ளன என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி எமிலி மெக்டொனால்ட்.
டாக்டர் வினுதா ஜி, மெக்டொனால்டின் கருத்துடன் உடன்படுகிறார். (senior consultant gynaecologist and women health expert at Athreya Super Speciality Hospital Bengaluru)
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நிறப் பார்வையில் உள்ள வேறுபாடுகளுக்கான நரம்பியல் அடிப்படையானது, முதன்மையாக கண்கள் மற்றும் மூளையில் உள்ள மரபணு மற்றும் கட்டமைப்பு வேறுபாடுகளில் உள்ளது.
பெண்களுக்கு பொதுவாக இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும், ஆண்களுக்கு ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் இருக்கும். Cone செல்களின் வளர்ச்சிக்கு காரணமான மரபணுக்கள் (நிறத்தைக் கண்டறியும்) X குரோமோசோமில் அமைந்துள்ளதால், பெண்களுக்கு சாத்தியமான நன்மைகள் உள்ளன.
ஒவ்வொரு X குரோமோசோமிலும் ஒரு பெண்ணுக்கு இந்த மரபணுக்களில் மாறுபாடுகள் இருந்தால், அவள் பரந்த அளவிலான cone செல் வகைகளைக் கொண்டிருக்கலாம். இது பரந்த நிறங்களை உணர அனுமதிக்கும்.
வண்ண உணர்வில் cone செல்களின் பங்கு
விழித்திரையில் உள்ள cone செல்கள் வண்ண உணர்விற்கு முக்கியமானவை. மூன்று வகையான cone செல்கள் உள்ளன, ஷார்ட், மீடியம், லாங்- (S,M, L) ஒவ்வொன்றும் ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களுக்கு உணர்திறன் கொண்டவை, என்று டாக்டர் வினுதா கூறுகிறார்.
ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களைச் செயலாக்கி, இந்தத் தகவலை மூளைக்கு அனுப்புவதன் மூலம் நிறத்தைப் பற்றிய உணர்வை உருவாக்க இந்த செல்கள் இணைந்து செயல்படுகின்றன.
பெண்களில், இரண்டு X குரோமோசோம்கள் இருப்பதால் அவை கூம்பு செல்களில் அதிக மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்.
விஷன் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, சில பெண்கள் நான்காவது வகை Cone செல்களைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் வண்ண பாகுபாடு திறன்களை மேம்படுத்துகிறது, மேலும் ஆண்கள் பார்க்காத வண்ணங்களில் நுட்பமான வேறுபாடுகளை உணர அனுமதிக்கிறது.
ஆண்களுக்கு அவர்களின் ஒற்றை X குரோமோசோம் காரணமாக இது குறைவாகவே காணப்படுகிறது, என்று அவர் மேலும் கூறுகிறார்.
பல நரம்பியல் மற்றும் ஹார்மோன் காரணிகள் வண்ண உணர்வு வேறுபாடுகளை பாதிக்கலாம். ஹார்மோன் மாறுபாடுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன், விழித்திரை மற்றும் பார்வைப் புறணியைப் பாதிக்கலாம் (retina and visual cortex), இது வண்ண உணர்திறனை அதிகரிக்கும்.
ஜர்னல் ஆஃப் விஷனில் நடந்த ஒரு ஆய்வில், ஈஸ்ட்ரோஜன் கூம்பு செல்களின் செயல்பாடு மற்றும் வண்ண செயலாக்கத்தில் ஈடுபடும் நரம்பியல் பாதைகளை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
நரம்பியல் ரீதியாக, மூளையின் காட்சி செயலாக்க பகுதிகளில் உள்ள வேறுபாடுகளும் ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.
பெண்களுக்கு பொதுவாக மூளையின் அளவோடு ஒப்பிடும்போது ஒரு பெரிய முதன்மை காட்சிப் புறணி (primary visual cortex) உள்ளது, இது மிகவும் விரிவான வண்ண உணர்விற்கு பங்களிக்கக்கூடும். இந்த கட்டமைப்பு வேறுபாடு, ஹார்மோன் தாக்கங்களுடன் இணைந்து, ஆண்களிடம் இருந்து பெண்கள் நிறங்களை வித்தியாசமாக உணர வழிவகுக்கும்.
டாக்டர் வினுதா, வண்ணம் உள்ளிட்ட காட்சித் தகவல்களைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான மூளையின் ஆக்ஸிபிடல் லோப் மற்றும் விஷுவல் கார்டெக்ஸ், (occipital lobe and visual cortex) பற்றி பேசுகிறார்.
இந்த பகுதிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வித்தியாசமாக செயல்பட முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
நியூரோ இமேஜின் ஆராய்ச்சியின் படி, முதன்மைக் காட்சிப் புறணிப் பகுதியில் பெண்கள் அதிக அடர்த்தியாக நிரம்பிய நியூரான்களைக் கொண்டுள்ளனர், இது வண்ண நுணுக்கங்கள் உட்பட சிறந்த காட்சி விவரங்களைச் செயலாக்கும் திறனை மேம்படுத்தும்.
கூடுதலாக, functional MRI ஆய்வுகள் ஆண்களுடன் ஒப்பிடும்போது நிறப் பாகுபாடு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடும் போது பெண்கள் பெரும்பாலும் மூளையின் பல பகுதிகளில் அதிக செயல்பாட்டைக் காட்டுகின்றனர்.
இது வண்ணத் தகவலைச் செயலாக்குவதற்கு மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் பரவலான நரம்பியல் வலையமைப்பை பரிந்துரைக்கிறது, இது மேம்பட்ட வண்ண உணர்விற்கு வழிவகுக்கும்.
Read in English: True or false: Women see more colours than men
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.