நம் வீட்டின் சமையல் அறை முக்கியமானது. சாப்பாடு என்றாலே மகிழ்ச்சி தான். விதவிதமா சாப்பிட பிடிக்கும். ஆனாலும் பல நேரங்கள்ல கிச்சன்லலே அதிக நேரம் போற மாறி இருக்கும். எப்படா ரெஸ்ட் எடுக்கலானு இருக்கும். இதுக்கு நாம சமையல வேகமா செய்து முடிக்கனும். அதற்கு இங்கு சில குக்கிங் சீக்ரெட்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு வேகவைப்பது
உருளைக்கிழங்கை வேகவைக்கும் முன், ஒரு ஃபோர்க் ஸ்பூன் கொண்டு குத்தி, குக்கரில் வேகவைத்தால், சிறிது நேரத்தில் தயாராகிவிடும். நேரமும் மிச்சப்படும்.
பால் கொதிக்க வைப்பதற்கு முன்..
பால் கொதிக்க வைப்பதற்கு முன் பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து, அதன்பின் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்படி செய்யும் போது பாத்திரத்தில் பால் ஓட்டாமல் இருக்கும்.
கண்டிப்பாக நாம் எல்லோரும் இதை செய்து இருப்போம்..
கண்ணாடி பாட்டில், ஊறுகாய் பாட்டிலை மீண்டும் கிச்சனில் பயன்படுத்த நினைப்போம். அப்படி இருக்கும் போது, அதில் உள்ள லேபிளை அகற்ற முயற்சிப்போம். ஆனாலும் அது வராது. ஈஸியாக லேபினை அகற்ற பாட்டிலை மைக்ரோவேவில் வைத்து எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி எடுத்து உரிக்க லேபிள் வந்துவிடும்.
குக்கரில் பருப்பு வேக வைப்பது
குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது, அடிக்கடி பருப்பு பொங்கி வந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைக்கலாம்.
பூண்டு உரித்தல்
பொதுவாக பூண்டு உரித்தல் கடினமான வேலையாக பார்க்கப்படுகிறது. இதை செய்தால் அதுவும் ஈஸி. மைக்ரோவேவ்வில் 30 விநாடிகள் வைத்து எடுத்து தோல் உரித்தால் எளிதாக வந்துவிடுமாம்.
தேங்காய் எடுப்பது
உடைத்த தேங்காயிலிருந்து தேங்காயை எளிதாக எடுக்க, உடைத்த தேங்காயை 2-3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து எடுத்து ஆற விட வேண்டும். பின் அந்த தேங்காய் ஓட்டின் மீது தட்டினால் தேங்காய் வந்துவிடும்.
எண்ணெய் இல்லாமல் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?
எண்ணெய் இல்லாமல் மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய, உருளைக்கிழங்கு துண்டுகளை மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி மைக்ரோவேவில் வைக்கவும். அவ்வளவுதான் எண்ணெய் இல்லாத, மிருதுவான சிப்ஸ் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil