நம் எல்லோருக்கும் தோசை பிடித்தமான உணவுதான். அதிலும் மிருதுவான, ருசியான தோசை என்றால் இன்னும் விருப்பம் அதிகம். தோசைகளில் பலவகை உண்டு. அவற்றில், நாம் தென்னிந்திய ருசிக்கேற்ற தோசை செய்முறையை இப்போது பார்ப்போம். இந்த தோசையை எந்த நேரத்திலும் ருசிக்கலாம். மேலும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் சமீபத்தில் கிரீன் ராவா தோசை தயாரிப்பதற்கான எளிதான செய்முறையைப் பகிர்ந்துள்ளார். "புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளால் சுவை மற்றும் இயற்கையாக வண்ணம் கொண்ட இந்த கீரின் ராவா தோசை தனித்துவமானது மற்றும் சுவையாக இருக்கிறது!" என்று அவர் எழுதியுள்ளார்.
தேவையான பொருட்கள்
தோசைக்கு
பூண்டு - 6-8 பல்
பச்சை மிளகாய் - 3-4
எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
தண்ணீர் – 1 ¼ கப்
ரவை - 1 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சட்னிக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 6-8
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 4-5 பல்
காய்ந்த மிளகாய் - 2-3
தக்காளி - 2-3
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தோசை
* பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, புதினா, 1/4 கப் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* கலவையை நன்றாக பேஸ்டாக கலக்கவும்.
* இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.
* இதில் அரைத்து வைத்த பச்சை பேஸ்ட், சீரகம், 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
* இதை நன்றாக கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* இப்போது அதில் உப்பு, மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதன் மீது மாவை ஊற்றி தோசை சுடவும். அதன் மீது எண்ணெய் சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் வரை வேக வைக்கவேண்டும்.
* கல்லில் இருந்து தோசையை பக்குவமாக வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான கீரின் ரவா தோசை ரெடி!
சட்னி
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் எண்ணெய் சேர்க்கவும். இதில், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சேர்த்து 1 முதல் 2 நிமிடம் வதக்கவும்.
* இப்போது தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும். அது மென்மையாகவும் கூழாகவும் வரும் வரை வதக்கவும்.
* பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
* இந்த மசாலாவை ஒரு மிக்சியில் போட்டு, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான சட்னி ரெடி!
இப்போது, சுவையான சட்னியுடன் மிருதுவான சூடான தோசையை சாப்பிடுங்கள். இந்த செய்முறையை நீங்கள் எப்போது முயற்சிக்க போகிறீர்கள்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.