/tamil-ie/media/media_files/uploads/2022/03/maple-syrup_thinkstock_759.jpg)
Try this homemade honey based face packs for glowing skin
நல்ல ஆரோக்கியத்தின் அமுதம் என்று அழைக்கப்படும் தேன், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்த தங்க திரவம் உங்கள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேன்’ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தேன், விரைவில் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும்.
உங்கள் சரும பளபளப்பை மீட்டெடுக்க தேன் சார்ந்த ஃபேஸ் பேக்ஸ் இதோ!
ரோஸ் வாட்டர் தேன் ஃபேஸ் மாஸ்க்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/honey-1200.jpg)
1 டீஸ்பூன் தேன் உடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து’ முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவவும். தேன் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசர், ரோஸ் வாட்டர் டோனர் ஆக செயல்படுகிறது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் இறந்த சருமத்திற்கு சிகிச்சையளிக்க நல்லது.
தயிருடன் கலக்கவும்
கிண்ணத்தில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 4 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள்; இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து, இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
வாழைப்பழம் தேன் ஃபேஸ் மாஸ்க்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/SKINCARE-759-1.jpg)
2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை நன்றாக மசிக்கவும் (விதைகள் அதிகமாக இருந்தால் நீக்கவும்). பேஸ்டை நன்றாக கலந்து, பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தினால், உங்களுக்கு மாய்ஸ்சரைசர் எதுவும் தேவையில்லை, ஏனெனில் இது உங்கள் சருமத்தை மிகவும் மிருதுவாக மாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.