மக்களிடையே ஆரோக்கியம் சார்ந்த உணவு பழக்கங்கள் தலைதூக்கியதிலிருந்து, சர்க்கரை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மோசமான பெயரைப் பெற்றுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் போன்ற பல வாழ்க்கை முறை நோய்களுக்கு வழிவகுக்கும்.
Advertisment
ஆனால் கடினமான கறைகளை அகற்றுவது, உங்கள் தாவரங்களில் இருந்து பூச்சிகளை விலக்கி வைப்பது போன்ற உங்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு சர்க்கரை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, மேலும் இது உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சர்க்கரையுடன் கூடிய சில அத்தியாவசிய ஹேக்குகள் இங்கே உள்ளன!
கறை நீங்க!
Advertisment
Advertisement
உங்கள் துணிகளில் படிந்திருக்கும் சேறு மற்றும் புல் கறைகளை அகற்றுவதற்கான முயற்சிகளில் நீங்கள் சோர்வாக இருந்தால், சர்க்கரை ஒரு மீட்பராக இருக்கும். சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து, அது ஸ்க்ரப் போன்ற கெட்டியான பேஸ்டாக செய்து, அதை கறை இருக்கும் இடத்தில் ஊற்றி நன்றாக தேய்த்து, ஒரு மணி நேரம் வைத்திருந்து கழுவினால், கறை மறைந்துவிடும்.
நாக்கு காயங்களை ஆற்ற
நம்மில் பெரும்பாலோர் அன்றாட வாழ்வில் இதை அனுபவிக்கிறோம், நமக்குப் பிடித்த சூடான தேநீரை வாயில் வைக்கும் போது சில நேரங்களில் அது நாக்கை சுட்டுவிடும். அதனால் ஏற்படும் வலியை உங்களால் தாங்க முடியாது. இனி பயப்பட வேண்டாம். வாயில் சிறிதளவு சர்க்கரை வைத்தால் வலி நீங்கும்!
இரத்த கசிவு நிற்க
கிச்சனில் காய்கறி வெட்டும்போது தெரியாமல் விரலையும் சேர்த்து வெட்டி விட்டீர்களா? சிறிய வெட்டுக்களில் இருந்து இரத்தம் உறைதல் செயல்முறையை துரிதப்படுத்துவதன் மூலம் சர்க்கரை உடனடியாக இரத்தக் கசிவை நிறுத்தும். சிறிது சர்க்கரையை காயத்தில் தூவவும். இது ஒரு லேசான கிருமிநாசினியாக செயல்படும். இது இரத்தம் உறைதல் செயல்முறைக்கு உதவுவதன் மூலம் தொற்றுநோயை மேலும் தடுக்கிறது.
இன்ஸ்டண்ட் பிரைட் லுக்
அழகு ஆர்வலர்கள் சர்க்கரை மீது சத்தியம் செய்கிறார்கள். சர்க்கரை உங்கள் சருமத்திற்கு சிறந்த இயற்கையான ஸ்க்ரப், அதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன. ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் காபி மற்றும் ½ டீஸ்பூன் எலுமிச்சையுடன் கலந்து மெதுவாக ஸ்கரப் செய்யவும். முடிவுகள் உங்களை சர்க்கரையின் மீது காதல் கொள்ள வைக்கும்.
முகப்பரு சிகிச்சைக்கு
சர்க்கரை ஆண்டிசெப்டிக் பண்புகளால் நிரம்பியுள்ளது, இது உங்கள் சருமத்தை ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில், சர்க்கரை மற்றும் சில துளிகள் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்திய ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தேய்த்தால், சரும துளைகளை திறந்து, முகப் பருக்களை குறைக்க உதவும். இந்த சர்க்கரை உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.
தோட்ட பராமரிப்புக்கு
உங்கள் தோட்டத்தில் இருக்கும் புல் மீது சிறிது சர்க்கரையை தூவி சிறிது தோண்டி எடுக்கவும். சர்க்கரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நொதி வினைகளை முடுக்கி’ புல்லை உயிர்ப்பிக்க உதவுகின்றன. ஒரு சில நாட்களில் புல் பச்சை நிறமாக மாறும். அதுமட்டுமின்றி உங்கள் பூந்தொட்டிகளில் சில சர்க்கரைப் படிகங்களைத் தூவலாம். இது பூக்கள் மற்றும் தாவரங்களின் மந்தமான தன்மையை புதுப்பிக்க உதவுகிறது.
பூச்சி வராமல் தடுக்க
சர்க்கரை, தண்ணீர் மற்றும் போராக்ஸ் ஆகியவற்றை சம அளவில் கலந்து, நீங்களே கிருமிநாசினி தெளிப்பை உருவாக்கி, உங்கள் செடிகளை எறும்புகள் மற்றும் தேவையற்ற பூச்சிகளிடமிருந்து காப்பாற்றலாம். கரைசலில் சிறிது காட்டனை ஊறவைத்து, உங்கள் செடிகளைச் சுற்றி எறும்புகள் மற்றும் பூச்சிகளைக் காணும் இடத்தில் வைக்கவும், சர்க்கரை அவற்றை ஈர்க்கிறது மற்றும் போராக்ஸ் அவற்றை உடனடியாகக் கொல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“