திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ரூ.300 கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை (டிச.24) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வருகின்றன. அதை பக்தர்கள் முன்பதிவு செய்து, ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான டிக்கெட்டுகள், அதற்கு முந்தைய மாதத்தின் இறுதி வாரங்களில், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, வருகிற 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், நாளை (டிச.24) காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பக்தா்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் 1 ஐடியைப் பயன்படுத்தி 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தரிசன டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை/ வாக்காளர் ஐடி பரிசீலிக்கப்படும். NRI-களுக்கு, முன்பதிவு செய்ய பாஸ்போர்ட் எண் தேவைப்படும்.
டிக்கெட் எண்ணிக்கை பொருத்தவரையில்,ஜனவரி மாதம் 1ஆம் தேதி வருடபிறப்பை முன்னிட்டு, 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், 2 முதல் 12 ஆம் தேதி வரை, தினசரி 12 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன.
அதேபோல் வைகுண்ட துவாதசி, மகர சங்கராந்தி, பார்வேதி உற்சவம் மற்றும் கோதா பரிணயோத்ஸவம் மற்றும் வைகுண்ட துவார தரிசனம் ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு 13ஆம் தேதியிலிருந்து 22 வரை தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், 23 முதல் 31 வரை 12 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன.
திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி, காலை 9 மணி முதல் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், பக்தர்கள் திருமலையில் உள்ள தற்போதைய கவுன்டர்களில் ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை அறைகளைப் பெற வேண்டும்.
இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“