ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள், ஸ்ரீவாரி சேவா கோட்டா ஆகியவை வெளியிடும் தேதி மற்றும் நேரத்தை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட்கள் பெறுவதற்கான முன்பதிவு மார்ச் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் நடைபெறும். டிக்கெட் உறுதியான பக்தர்கள் மார்ச் 22ம் தேதி பகல் 12 மணிக்கு முன்பாக டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்தி விட வேண்டும்.
மார்ச் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
ஜூன் 19 முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை திருமலையில் நடைபெற உள்ள ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்கள் மார்ச் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் கிடைக்கும்.
ஸ்ரீவாரி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகியவற்றில் விர்ட்சுவல் முறையில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்கள் மற்றும் தரிசன டிக்கெட்கள் மார்ச் 21 மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டோக்கன்கள், மார்ச் 23 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசனம் மற்றும் தங்கும் அறைகளுக்கான கோட்டா முன்பதிவுகள் மார்ச் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். மாலை 3 மணிக்கு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
மார்ச் 25 காலை 10 மணிக்கு, பக்தா்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு மார்ச் 25 அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் தன்னார்வ ஸ்ரீவாரி சேவை செய்ய விரும்புபவர்களக்கான கோட்டா மார்ச் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவைக்கு பகல் 12 மணிக்கும், பரக்கமணி சேவைக்கு பகல் 1 மணிக்கும் முன்பதிவுகள் நடைபெறும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவுகள் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“