திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து வைக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, திருப்பதியில் ஜூன் மாதம் இறுதி வரை ஆர்ஜித சேவைகள், ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், லக்கி டிப் தரிசனம் ஆகியவற்றிற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன.
ஆனால் தற்போது கோடை விடுமுறை தொடங்கி இருப்பதால், பலரும் குடும்பத்துடன் திருப்பதி சென்று வர விரும்புகின்றனர். ஒருவேளை நீங்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தால் நீங்கள் பெருமாளை விரைவில் தரிசிக்க ஒரு வாய்ப்புள்ளது.
திவ்ய தரிசனம் டிக்கெட் (SSD), தினமும் அதிகாலை 3 மணிக்கு விஷ்ணு நிவாசம், சீனிவாசம் வளாகம், பூதேவி வளாகத்தில் வழங்கப்படும்.
இந்த டிக்கெட்டுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம். SSD டிக்கெட்டுகளை கொடுக்கும்போது நேரம் மற்றும் நுழைவு விவரங்கள் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் நீங்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“