திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக, சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று (ஏப்.26) முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணி, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நோயாளிகள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கான தரிசன வழிகாட்டுதல்கள்:
வயது 65 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
டோக்கன் வழங்குவதற்கு அசல் ஆதார் அட்டை அவசியம்.
கணவன் அல்லது மனைவி 65 வயதை நிறைவு செய்திருந்தால், அவர்களின் ஆதார் அட்டையை சமர்ப்பித்தால், அவர்களது துணை அனுமதிக்கப்படுவார்.
உடல் ஊனமுற்றோருக்கான தர்ஷன் வழிகாட்டுதல்கள்:
மாற்றுத் திறனாளிகள் தங்களின் அடையாளச் சான்றிதழுடன், அதாவது ஆதார் அட்டையுடன், அந்தந்த மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட உடல் ஊனமுற்றோர் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய், முடக்குவாதம், ஆஸ்துமா மற்றும் தையாலசிஸ் போன்ற நிரந்தர உடல்நலக் கேடுகளைக் கொண்ட நோயாளிகள் உரிய மருத்துவப் பதிவுகள் மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
80 வயதைத் தாண்டியவர்களுக்கு உதவியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களுக்கு தகவல்:
இந்த தரிசனம் கிடைத்ததும், 90 நாட்களுக்குப் பிறகுதான் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய முடியும்.
அசல் ஆவணங்கள் மற்றும் வயதுச் சான்று (ஆதார் அட்டை) அதிகாரிகளிடம் காட்டப்பட வேண்டும்.
குறிப்பிட்ட நேர இடைவெளிக்கான டோக்கன்கள் கிடைக்கும் வரை அட்வான்ஸ் டோக்கன்கள் வழங்கப்படும்.
வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி தரிசன ஸ்லாட்டுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.