தூக்கம் இல்லாமல் அவதியா? வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இந்த செடியின் 4-5 இலைகள் போதும்; டாக்டர் மைதிலி
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகள் மன அழுத்தம், மன நலம், நிம்மதியாக ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றுக்கும் கூட மிகச்சிறந்த பலன்களைத் தரும் அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகள் மன அழுத்தம், மன நலம், நிம்மதியாக ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றுக்கும் கூட மிகச்சிறந்த பலன்களைத் தரும் அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் துளசிக்கு மிக முக்கிய இடமுண்டு. சளி போன்ற நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மன அழுத்தம், மனநலம், ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றுக்கும் கூட துளசி மிகச்சிறந்த பலன்களைத் தரும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
Advertisment
வாய் துர்நாற்றம்:
துளசி இலைகளை பறித்து சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து குழைத்து பல்ஈறுகளில் படும்படி பல்பொடியாக பயன்படுத்தும்போது வாய் துர்நாற்றம் நாளடைவில் குணமாகும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
வாயில் புண்:
Advertisment
Advertisements
ஈறுகளில் ஏற்படக்கூடிய வீக்கமும், உதடு மற்றும் நாக்கு பகுதியில் புண்கள் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகள், 2 கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க விடவேண்டும். அதனுடன் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள், கால் டீஸ்பூன் அளவு கல் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, வெதுவெதுப்பான சூட்டில் வாயில் ஊற்றி கொப்பளித்து துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதால், 4 நாட்களில் வாய்ப்புண், உதடு மற்றும் நாக்கில் வரக்கூடிய புண்கள் விரைந்து குணமாகும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
வேர்வை துர்நாற்றம்:
அக்குள் பகுதியிலிருந்து உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இப்படி பட்டவர்கள், ஒரு பக்கெட் அளவு தண்ணீரில் 5 கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு இரவு முழுவதும் ஊரவிட்டு மறுநாள் காலையில குளிக்கும்போது உடல் துர்நாற்றம் நாளடைவில் மறையும். அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் ஏற்படாமல் துளசி தடுக்கும் என்கிறார் மருத்துவர் துளசி.
துளசி கசாயம்:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகள் எடுத்து சுத்தம் செய்து, 2 கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன், சுக்கு பொடி, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, 25 மில்லி காலை மற்றும் இரவு உணவிற்கு முன்பு தொடர்ந்து குடிச்சிட்டு வரும்போது சளி, இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல் எல்லாம் விரைந்து குணமாகும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
தூக்கமின்மை பிரச்னையா?
துளசி இலைகள் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படாமல் தடுக்கும். 5 துளசி இலைகளை எடுத்து சுத்தம்செய்து சாப்பிடலாம். மாரடைப்பு, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடிய தன்மையும் துளசியில் உள்ளது. செரிமானம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும். குடல் பகுதியின் இயக்கத்தையும் சீரமைக்கும். உடலி பி.ஹெச் அளவை சமநிலையில் வைக்கக் கூடிய தன்மையும் துளசியில் அதிக அளவில் உள்ளது. உடல் சூடு காரணமாக ஒருசிலக்கு தலைவலி ஏற்படும். ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளை எடுத்து சுத்தம் செய்து, பேஸ்ட் மாதிரி அரைத்து அதனுடன் சந்தனம் சேர்த்து, நெற்றி பகுதியில் தடவினால், உடல் சூடு குறைந்து அதனால் ஏற்படும் தலைவலி நீங்கும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.