வெறும் 3 பொருட்கள் வைத்து இந்த டர்கிஷ் ஸ்வீட் செய்ய முடியும்.
செய்முறை
2 கப் சர்க்கரை
4 கப் தண்ணீர்
1 கப் கான்பிளவர் மாவு
2 கப் தண்ணீர்
அரை எலுமிச்சை பழம்
அரை ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
பிங்க் புட் கலர் சில துளிகள்
நெய்
2 ஸ்பூன் கான்பிளவர்
2 ஸ்பூன் சர்கக்ரை பொடி
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சர்க்கரை , தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கம்பிபதம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவை தண்ணீரில் கலந்து சேர்த்துகொள்ளவும். அதை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெண்ணிலா எசன்ஸ், புட் கலர் சேர்த்து கிளரவும். பாகை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை நெய் தடவிய தட்டில் கொட்டவும். சில மணி நேரத்தில் இதை சிறிய அளவில் வெட்டி எடுக்கலாம். அதன் மீது சர்க்கரை- கான்பிளவர் மாவை பொடித்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“