நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது மிகவும் அவசியம். உடலை சுத்திகரிக்க, மஞ்சள் மிகவும் உதவியாக இருக்கிறது. மஞ்சளில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியானால், உடல் இயக்கம் அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் சேர்த்த பால்
உடல் இழந்த சத்துகளை பெறுவதற்கு பால் முக்கியமாக உதவுகிறது. இந்நிலையில் ஒரு கப் பாலில் , மஞ்சள் பொடி, மிளகு பொடி சேர்த்து குடித்தால், கூடுதலாக உடலுக்கு நன்மைகள் கொடுக்கும்.
மஞ்சள் சேர்த்த டிடாக்ஸ் தண்ணீர்
இதற்கு ஒரு கிளாஸ் பாத்திரத்தில் , சூடான தண்ணீர், இஞ்சி துண்டுகள், எலுமிச்சை துண்டுகள், புதினா இலைகள், ஒரு துண்டு பட்டை சேர்த்து இரவில் அப்படியே விட்டுவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் இதில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும். வாயுத்தொல்லை ஏற்படாது, வீக்கத்தை குறைக்கும். வரண்ட தொண்டை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கும்.
மஞ்சள் சேர்த்த டீ
1 டேபிள் ஸ்பூன் பச்சையான மஞ்சளை துருவிக்கொள்ளவும், அதில் 2 கப் தன்ணீர் கொதிக்க வைக்கவும், அதில் மஞ்சளை சேர்க்கவும், அரை துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்கவைக்கவும். தொடர்ந்து இதை வடிகட்டி எலுமிச்சை சாறு அரை ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது வயிற்று உப்புதல், வீக்கம், உடல் வலியை போக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“