தொடர் செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு

சமீபத்தில் பிரிட்டீஸ் மெடிக்கல் ஜர்னலில் செரிமானக் கோளாறுகளை சீர்செய்ய மஞ்சள்(கர்குமின்)ஆங்கில மருந்துகளுக்கு இணையாக வேலை செய்கிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் பிரிட்டீஸ் மெடிக்கல் ஜர்னலில் செரிமானக் கோளாறுகளை சீர்செய்ய மஞ்சள்(கர்குமின்)ஆங்கில மருந்துகளுக்கு இணையாக வேலை செய்கிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
மஞ்சள்

மஞ்சள்

சமீபத்தில் பிரிட்டீஸ் மெடிக்கல் ஜர்னலில் செரிமானக் கோளாறுகளை சீர்செய்ய மஞ்சள்(கர்குமின்)ஆங்கில மருந்துகளுக்கு இணையாக வேலை செய்கிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

Advertisment

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருளுக்கு அழற்சிக்கு(Anti-inflammatory)எதிராகவும், கிருமிகளுக்கு எதிராகவும், செரிமானக் கோளாறுகளை சீர்செய்யும் தன்மையும் இருப்பதால்,அது தமிழகத்தில் நெடுங்காலமாக மருந்தாக(உணவே மருந்து) பயன்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் 2019-21 இடைப்பட்ட காலத்தில் 18-70 வயதினரிடையே,206 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மஞ்சள்(கர்குமின்)நாள்பட்ட செரிமான பிரச்சனைகளை ஆங்கில மருந்துகளுக்கு இணையாக சீர்செய்வது உறுதியாகியுள்ளது.

ஆய்வு 28 நாட்கள் வரை நடந்தது.மொத்தம் 206 பேரை 3 குழுக்களாக பிரித்தனர்.69 பேருக்கு மஞ்சள் மட்டும்(500 மி.கி.-நாளுக்கு 4 வேளை) கொடுக்கப்பட்டது.

Advertisment
Advertisements

68 பேருக்கு அமிலம் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தும் ஒமிப்பிரசோல்(20 மி.கி.)எனும் மருந்து கொடுக்கப்பட்டது.69 பேருக்கு,2 மருந்துகளும்(மஞ்சள்+ஒமிப்பிரசோல்)கொடுக்கப்பட்டது.

206 பேரில் 151 பேர் ஆய்வு முடியும் வரை முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொண்டனர். 28 நாள் ஆய்வு முடிவிற்குப் பின் செரிமான பிரச்சனையில் உள்ள மாற்றத்தை சர்வதேச தரத்தின்(Severity of Dyspepsia Assessment Score-SODA)படி அளவீடு செய்ததில்,(28 மற்றும் 56 நாட்கள் கழித்து)அனைத்து 3 குழக்களிலும்,வலி+செரிமானத் தன்மையில் நல்ல முன்னேற்றம்   இருப்பது தெரிய வந்துள்ளது. 28 நாட்களில் தெரியும் முன்னேற்றத்தை விட 56 நாட்களுக்குப் பின் தெரியும் முன்னேற்றம் கூடுதலாக இருந்தது.

இதன் மூலம் மஞ்சள் தனியாக கொடுத்தும் ஆங்கில மருந்துகளுக்கு இணையான முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதில் மஞ்சளின் சிறப்பு அம்சம் என்ன?-

 ஒமிப்பிரசோல் மருந்தை நாள்பட எடுக்கும் போது, மினரல் சத்து குறைப்பாடு,அதனால் அதிக எலும்பு முறிவு,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிக கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இத்தகைய பின்விளைவுகள் மஞ்சள் எடுப்பதால் இல்லவே இல்லை.ஆக நாமும் செரிமான பிரச்சனைத் தீர்க்க மஞ்சளை அதிகம் உட்கொண்டு பலன் பெற முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

 (அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தது-ஆயுளைக் கூட்ட-அனைவரும் அறிந்த விசயம்.அந்த காலத்தில் அது அஸ்கார்பிக் அமிலம்-(வைட்டமின்-சி)காரணமாக நிகழ்ந்தது என நமக்கு தெரியாது. பிற்காலத்தில் அது வைட்டமின்-சி யின் செல்களை காக்கும் Anti-oxidant தன்மையால்(Free radicle உற்பத்தியாவதைக் குறைப்பதால்செல்கள் காக்கப்படுகின்றன)என ஆய்வுகள் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது.)

 நமது முன்னோர்கள் மருத்துவ அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு,மஞ்சளும்,நெல்லிக்கனியும் உதாரணம்."ஆலும்,வேலும் பல்லுக்குறுதி" என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு.நமது மரபு மருத்துவத்தை பேணிகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் நல்லது.

மரு.வீ.புகழேந்தி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: