அதிக வெயில் மற்றும் மழை நேரங்களில் சில உணவினாலும், மோசமான நீரினாலும் தொற்றுகள் ஏற்படும். இதிலிருந்து உங்களை காப்பாற்ற. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சில உணவுகளை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழங்களான ஆராஞ்சு, எலுமிச்சை, கிரேப் ப்ரூட் ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி தொற்றுகளுக்கு எதிராக செயல்படும். இந்நிலையில் இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ப்ளூ காய்ச்சல், சளி மற்றும் வைரல் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றும். வைட்டமின் சி இரும்பு சத்தை உள்வாங்கிக்கொள்ளும், எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.
கீரை, கேல், வெந்தயக் கீரை ஆகியவற்றில் மினரல்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் போலேட், இரும்பு சத்து உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த காய்கறிகள் நம் உடலை சுத்திகரிக்க உதவும். ஜீரணத்தை அதிகரிக்கும்.
பூண்டில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று எதிராக செயலாற்றும் பண்பு உள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதில் அலிசின் உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படும். இதுபோல வைரஸ் தொற்று, பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படும். சுவாசப் பிரச்சனைகளை தடுக்கும். மேலும் சளி மற்றும் இருமலை தடுக்கும்.
மஞ்சள்
இதில் குர்குமின் உள்ளது. இது வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பண்புகள் உள்ளது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. நமது உணவிலும், அல்லது மஞ்சள் கலந்த பாலை நாம் குடிப்பது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
யோகர்ட் உடலில் தேவையான அளவு பேக்ட்டீரியாவை அது வளர்க்க உதவும். நல்ல நுண்ணுயிரிகளை கொண்ட குடல் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் இது ஒட்டுமொத்தமாக ஜீரணத்திற்கு உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“