Corona Virus Immunity Booster Recipe : கொரோனா, குளிர்காலம் மத்தியில் நம் உடல்நிலையை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். நம் உடல் ஒரே நாளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் தங்களின் உணவுப் பழக்கத்தை சமநிலைப்படுத்தி, ஆரோக்கியமான, வீட்டில் சமைத்த உணவை அவ்வப்போது சாப்பிட வேண்டும். அதே சமயம் சில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகிணி சோம்நாத் பாட்டீல். அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட இரண்டு எளிமையான ரெசிபிக்களை இனி பார்க்கலாம்.
Advertisment
நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் டர்மரிக் ஷாட்
Advertisment
Advertisements
தேவையான பொருள்கள்
கருமிளகு
வடிகட்டப்படாத ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு
மிதமான சுடு நீர்
மஞ்சள் தூள்
செய்முறை
மிதமான சுடு தண்ணீரில் அரை டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும். இப்போது அந்தக் கலவையோடு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்!
இந்த பானத்தின் நன்மைகள்
மஞ்சள்: இந்த மூலப்பொருள் குர்குமின் மூலம் செறிவூட்டப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி முகவர். "இது செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், premature ageing-ஐ குறைகிறது" என்று டாக்டர் பாட்டீல் கூறுகிறார்.
ஆப்பிள் சிடர் வினிகர்: இது நோய்க்கிருமிகளைக் கொல்லும் என்று அறியப்படுகிறது. மேலும், முந்தைய காலங்களில் காது தொற்று, பேன், மருக்கள் மற்றும் பலவற்றை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது. மக்கள் இதை பல நூற்றாண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். “ஆப்பிள் சிடர் வினிகர் என்பது வறண்ட சருமம் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளுக்கு ஒரு பொதுவான தீர்வு. நம் சருமம் இயற்கையாகவே சற்று அமிலமானது. டாபிக்கல் ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கையான பிஹச்சை (pH) மீண்டும் சமப்படுத்த உதவுகிறது” என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.
கருப்பு மிளகு: ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள இந்த பல்துறை மசாலாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் காதா அல்லது மூலிகை தேநீர்
வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 1-3 முறை இதனை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
புதிய துளசி இலைகள் - 5-6 அல்லது துளசி தூள் - 2 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி / இஞ்சி தூள் - 1/2 இன்ச்
அஜ்வைன் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு - 1/2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
க்ரீன் டீ இலைகள் - 2 தேக்கரண்டி
ஆர்கானிக் / திரவ / பேரீட்சை வெல்லம் - 1 தேக்கரண்டி
செய்முறை
அனைத்து பொருட்களையும் 500 மில்லி தண்ணீரில் சேர்த்து 10-15 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அதை ஒரு டம்ளரில் ஊற்றி சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து சூடாகக் குடித்து மகிழுங்கள்!
நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை தேநீர் / கதாவின் ஆரோக்கிய நன்மைகள்
பல்வேறு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் இந்த மூலிகை தேநீருக்கு பெரும் பங்கு உண்டு. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை குணப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல், குளிர் மற்றும் பல போன்ற சுவாச வியாதிகளின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"