ஒவ்வொரு சீசனும், அதன் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது, குறிப்பாக குளிர்காலம். ஆரோக்கிய நன்மைகளுடன் வரும் பருவகால உணவுகளை உட்கொள்வதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, இந்த குளிர்காலத்தில், டர்னிப் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா பரிந்துரைத்தார்.
"குளிர்காலங்களில் நான் விரும்பும் ஒன்று, அது வழங்கும் காய்கறிகளின் வரம், அவற்றில் டர்னிப் நிச்சயமாக தனித்து நிற்கிறது! அது பீட்ரூட் விட மென்மையானது மற்றும் முள்ளங்கியை விட பன்முகத்தன்மை கொண்டது,” என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.
குளிர்கால மெனுவில் டர்னிப்பை ஏன் இணைக்க வேண்டும்?
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: டர்னிப்ஸில் குளுக்கோசினோலேட்டுகள் (தாவர அடிப்படையிலான இரசாயனங்கள்)- உள்ளன. இது அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்க உதவும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:
நைட்ரேட்டுகளைக் கொண்ட டர்னிப்ஸ் போன்ற உணவுகள், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் ஒன்றாக ஒட்டிக்கொள்வதைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது:
டர்னிப்ஸில்’ லுடீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்து, மாகுலர் டிஜெனரேஷன் (macular degeneration) மற்றும் கண்புரை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
குடல் பிரச்சனைகளை நீக்குகிறது: டர்னிப்ஸ் அதிக நார்ச்சத்துள்ள உணவு ஆகும். அவை பெருங்குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி, குடல் இயக்கங்களை எளிதாக்குவதன் மூலம் டைவர்டிகுலிடிஸ் எரிப்புகளின் (diverticulitis flares) பரவலைக் குறைக்க உதவும்.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது: டர்னிப்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க அறியப்பட்ட லிப்பிடுகள் உள்ளன. அவை உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன, மேலும் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கின்றன.
இனி குளிர்காலத்தில் தவறாமல் டர்னீப்ஸை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “