விஜய்யின் நட்புக்கு மற்றொரு உதாரணம்! நண்பன் ஸ்ரீகுமாரின் வெற்றிக்காக இறங்கி வந்த தளபதி!

நடிகர் விஜய், நேரடியாக தொலைக்காட்சியில் தோன்றி, ஓட்டு கேட்டு நீங்க பார்த்து இருக்கீங்களா? அப்படியொரு சம்பவம் நடந்தது என்பது சினிமா உலகில் வரலாற்று உண்மை.

ஆம்! ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் 2வது சீசன் போட்டியாளரான, டிவி சீரியல் நடிகர் ஸ்ரீ குமாருக்காக மக்களை வாக்களிக்கும் படி, விஜய் டிவியில் நேரடியாக தோன்றி விஜய் கேட்டிருந்தார்.

அந்தளவு விஜய்க்கு முக்கியமானவரா ஸ்ரீ குமார்? ஆமாங்க… விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இவர். வேறென்ன வேண்டும்!.

2005ம் ஆண்டு அகல்யா நாடகம் மூலம் சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீகுமாருக்கு அதன் பின் எல்லாமே ஏற்றம் தான்.

பந்தம், மேகலா, சிவசக்தி, ருத்ரா போன்ற நாடகங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதிலும், சிவசக்தி நாடகம் ஸ்ரீகுமாரை உச்சம் தொட வைத்தது.

கடந்த 2009ம் ஆண்டு, நடிகை ஷமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷமிதா, சேரனின் பாண்டவர் பூமி படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல்கள் அல்லாது, பம்பரக்கண்ணாலே, சரோஜா,  விஜய்யின் தெறி, ராங்கூன் உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரீ குமார் நடித்திருக்கிறார்.

ரீசன்ட் டிவி சீரியல் பிரியர்களுக்கு ‘தலையணை பூக்கள்’ நாகராஜன் என்று சொன்னால், டக்கென்று நினைவுக்கு வந்துவிடுவார் நம்ம ஸ்ரீ குமார்.

சஞ்சீவ் உள்ளிட்டவர்களைப் போல, விஜய்யிடம் அளவோடு வைத்துக் கொள்ளும் நண்பராகவே ஸ்ரீ குமார் விளங்குகிறார். என்றும் விஜய்யின் அன்பை பெறுவதை மட்டுமே அவரது நண்பர்கள் விரும்புகின்றனர்.

எல்லாவற்றையும் விட மேலாக, ஸ்ரீ குமார் இசையமைப்பளர் கணேஷ், (அதாவது சங்கர் கணேஷ்) மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சரி… விஜய் ஓட்டு கேட்டு, ஜோடி நம்பர் ஒன் சீசனில் ஸ்ரீ குமார் ஜெயித்தாரா?…. இல்லை என்பதே பதில்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close