tv serial couple photos : சினிமாவில் இரண்டு படங்கள் ஜோடியாக நடித்தாலே கிசுகிசு சும்மா கலந்து கட்டி அடிக்கும். இன்றைக்கு சீரியலில் நான்கு ஆண்டுகள் வரை ஜோடியாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி பயாலஜி எல்லாம் ஒர்க் அவுட் ஆகாமல் இருக்குமா?
சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் திடீரென்று ரியல்ஜோடிகளாக மாறியிருக்கின்றனர். சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைவதோடு தொடர்ந்து சீரியலிலும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.
சீரியலில் இவர்களை பார்க்கும் போது வாவ் இந்த ஜோடிகள் பார்ப்பதற்கே சூப்பராக இருக்கிறார்களே. நிஜத்திலும் இவர்கள் இணைந்தால் செம்மாய இருக்கும். இப்படி உசுப்பு ஏத்தியே ரீல் ஜோடிகளை ரியல் ஜோடிகளாகிவிட்டார்கள் சீரியல் ரசிகர்கள்.
சரி அதை விடுங்க.. இன்று நம்முடைய ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி பிரிவில் சீரியலில் இணைந்து நடித்து நிஜத்திலும் இணைந்த சீரியல் ஜோடிகளை பார்க்கலாம் வாங்க.
1.ஸ்ரீஜா -சரவணன்
சரவணன் - மீனாட்சி ரீல் ஜோடி ரியல் ஜோடியா மாறிட்டாங்களாமே? திருப்பதியில கல்யாணம், கேரளாவில ரிசப்சன் என்பதுதான் ஊடகங்கங்களில் செம்ம பரபரப்பாக பேசப்பட்டது.
tv serial couple photos
2. ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி
இவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். விஜய் தொலைக்காட்சியை ஃபலோ செய்பவர்கள் எல்லோருக்கும் இவர்கள் கதை நன்கு தெரியும்.
tv serial couple photos
3. அன்வர் - சமீரா
ரியல் லவ் ஜோடி அன்வர் - சமீரா காதலர்களாக அறிமுகமாக, அமர்க்களமாகத் தொடங்கியது 'பகல் நிலவு' சீரியல். இந்த ஜோடியின் பொருத்ததை பார்த்து பொறாமைப்படாதவர்களே இல்லை.
tv serial couple photos
4. நடிகை ரக்ஷிதா - தினேஷ்
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக அறிமுகமான இவர்கள் 5 வருட காதல் கல்யாணத்தில் முடிந்தது.
tv serial couple photos
5. ப்ரஜீன் - சாண்ட்ரா
பல வருடங்களாக இந்த ஜோடியை சீரியலில் பார்த்தவர்கள் அதிகம். சமீபத்தில் தான் இவர்களுக்கு இரட்டி குழந்தைகள் பிறந்தன.
tv serial couple photos
6. விஜய் மற்றும் சிவரஞ்சனி.
பிரியமானவள் சீரியல் மூலம் பிரபலமான இவர்கள் இருவரும் கடந்த வருடம் திருமணத்தில் இணைந்தனர்.
tv serial couple photos
இன்றைய சீரியல் கேலரி இனிதே முடிவடைந்தது. நாளை வேறு டாப்பிக் மற்றும் சூப்பரான புகைப்படங்களுடன் மீண்டும் பார்க்கலாம்.