நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்.27-ம் தேதி நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தலைவர் விஜய் கட்சி கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.
விஜய்க்கு அடுத்து மாநாட்டின் நிகழ்ச்சிகைளை தனது கணீர் குரலில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கவிபாரதி துர்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விஜய் மேடையில் என்ட்ரி ஆகத் துவங்கியதிலிருந்து மாநாடு முடியும் வரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் வர்ணணை செய்தார். அதோடு மாநாட்டு முடிவில் விஜய்யும் இவரை பாராட்டினார்.
இந்நிலையில், தனது கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து தொகுப்பாளினி கவிபாரதி துர்கா
வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்தப் பெரிய மேடையை எனக்கு கொடுத்த தலைவர், தளபதி அவர்களுக்கும், பொதுச் செயலாளருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வாய்ப்பு வழங்கிய அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி. இதுபோன்ற ஆதரவு என்னை போன்ற சாமானிய பெண்ணிற்கு உத்வேகம் அளிக்கும். எதிர்பாராத ஆதரவு அளித்துள்ளீர்கள். என்னுடைய வளர்ச்சியில் உங்களுக்கு பங்கு வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“