கோவையில், குடியிருப்பு பகுதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கடையை அகற்றைக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, க.க.சாவடி - வேலந்தாவளம் சாலையில் உள்ள குடியிருப்பு அருகே புதிதாக தனியார் மதுபானக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு உடை அணிந்து மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்றவில்லை என்றால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று த.வெ.க மாவட்ட தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.
செய்தி - பி. ரஹ்மான்