Advertisment

உலகின் டாப் 10 புட்டிங் லிஸ்டில் இடம் பெற்ற இந்தியாவின் 2 வகை ஸ்வீட்: அதன் ரெசிபி இதோ

இந்தியாவை சேர்ந்த 2 ஸ்வீட் ரெசிபிக்கள், உலகத்தில் உள்ள டாப் 10 புட்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
food

இந்தியாவை சேர்ந்த 2 ஸ்வீட் ரெசிபிக்கள், உலகத்தில் உள்ள டாப் 10 புட்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Advertisment

உலகம் முழுவதும் உள்ள பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவுகள் மற்றும் ரெசிபிக்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கு வழங்கும் இணையதளம் டேஸ்ட் அட்லஸ். இந்நிலையில் இதில் உலகத்தில் உள்ள புட்டிங் வகையில் சிறந்த 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த ஃபிரினி 7வது இடத்தையும்  (  Phirni) , ஒடிசாவை சேர்ந்த கீர்  ( Kheer) 10-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த கீர் வகை சுமார் 2000 வருடங்கள் பழமையானது. ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோவிலில் இது செய்து தரப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு விழாக்களில் கீர் சமைக்கப்படுகிறது.

இந்நிலையில் பாரம்பரியம் நிறைந்த அரிசி கீர்  இதன் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி ஊறவைத்தது.

½ கப் சர்க்கரை

¼ டேபிள் ஸ்பூன் உப்பு

2 கப் துருவிய தேங்காய்

5 ஏலக்காய்

1 கப் தண்ணீர்

டிரை ப்ரூட்ஸ்

செய்முறை: அரிசியை நன்றாக 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து 3 முதல் 4 விசில் விட்டு மசிய வேக வைக்க வேண்டும். தேங்காய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து, அதை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வேக வைத்த அரிசியை சேர்க்கவும். இதை நன்றாக மசிக்கவும். தொடர்ந்து அதில் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். மிதமான தீயில் 7 நிமிடங்கள் விட வேண்டும். தொடர்ந்து டிரை ரூட்ஸை சேர்க்கவும்.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment