Insulin resistance can lead to many other health issues
இன்சுலின் எதிர்ப்பு, டைப் 2 நீரிழிவு நோயின் ஒரு முக்கிய காரணியாகும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன், இன்சுலின் விளைவுகளுக்கு உடலின் செல்கள் குறைவாக பதிலளிக்கும் போது இது நிகழ்கிறது.
Advertisment
இதன் விளைவாக, கணையம் ஈடுசெய்ய அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது, இது ரத்தத்தில் அதிக இன்சுலின் அளவை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், சாதாரண ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உடலின் திறன் பலவீனமடைகிறது, இதன் விளைவாக நீரிழிவு நோய் உருவாகிறது. இருப்பினும், நீரிழிவு நோய் மட்டுமல்ல, இன்சுலின் எதிர்ப்பும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அடித்தளமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீரிழிவு, இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஒரு ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் விளக்கினார்.
இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம் என்பது இந்த மருத்துவப் பிரச்சனைகளுக்கு (also known as metabolic syndrome) கொடுக்கப்பட்ட பெயர், என்று அவர் கூறினார்.
Advertisment
Advertisements
நீரிழிவு தவிர, கொழுப்பு கல்லீரல் (fatty liver) மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இன்சுலின் எதிர்ப்புடன் இணைக்கப்படக்கூடிய பிற பிரச்சினைகள் ஆகும். இது மேலும் முகப்பரு, ஹிர்சுட்டிசம் (hirsutism), பிசிஓஎஸ் மற்றும் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
இதை ஒப்புக்கொண்ட, டாக்டர் அனிகேத் முலே, இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோயால் மட்டுமல்ல, பிற நிலைமைகளாலும் காணப்படுகிறது என்றார்.
உடல் பருமன், இருதய நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) ஆகியவை இன்சுலின் எதிர்ப்பின் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் சில கவலையான நிலைமைகள் என்பது அறியப்பட்ட உண்மை.
மேலும், தேவையான அளவு உடல் செயல்பாடு இல்லாதது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ப்ரீடியாபயாட்டீஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளின்படி, இன்சுலின் எதிர்ப்பானது மாரடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான பக்கவாதம் மற்றும் அதிக நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை வரவழைக்கலாம், என்று நிபுணர் கூறினார்.
இன்சுலின் எதிர்ப்பை உண்மையில் மாற்றியமைக்க முடியாது என்றாலும், நீண்ட கால உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் அதை நிவர்த்தி செய்யலாம் என்று கபூர் குறிப்பிட்டார்.
டாக்டர் முலே இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்க பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்:
* மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தின் அளவை மீற வேண்டாம்.
*தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
* நன்றாக தூங்கவும், மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்.
*அதிக உழைப்பைத் தவிர்க்கவும்.
*உகந்த எடையை பராமரித்து, சத்தான உணவை உண்ணுங்கள்.
*உணவு என்று வரும்போது, இன்சுலின் எதிர்ப்பு இருந்தால் என்ன சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு நிபுணரின் உதவியையும் ஒருவர் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“