Tamil Health Tips For Diabetes : தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நோய் தாக்கம் இருக்கும்போது தொடர்ச்சியாக மருந்து எடுத்துக்கொள்வது மற்றும் உணவுக்கட்டுப்பாடு அவசியம் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துவது தொடாந்து வருகிறது. ஆனால் மருந்துகள் மட்டுமல்லாது இயற்கை உணவு பொருட்களின் மூலமும் நீரிழிவு நோய்யை கட்டக்குள் கொண்டுவர முடியும். வாழ்நாள் முழுவதும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமான உணவின் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.
நல்ல ஊட்டச்சத்து ஆதாரமாக இருக்கும் விதைகள் அனைவருக்கும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. உண்மையில், விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அதிக நன்மைகளை கொடுக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலம், நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலையை நன்றாக நிர்வகிக்க முடியும்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் சர்க்குலேஷன் ரிசர்ச் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், வாரத்திற்கு ஐந்து வேளை விதைகள சாப்பிடுவதன் மூலம், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோய்க்கான ஆபத்து 17 சதவிகிதம் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக விதைகளை உட்கொண்ட டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 34 சதவீதம் குறைவாகவும், கரோனரி இதய நோய்க்கு 20 சதவீதம் குறைவாக இருந்த இறப்பு விகிதம் 31 சதவீதமாக குறைக்கும் முன்கூட்டிய இறப்பு அபாயத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முந்திரி பருப்புகள் உதவுமா?
பிரபலமான நம்பிக்கையைப் போல இல்லாமல், மற்ற விதைகளுடன் ஒப்பிடும்போது முந்திரியில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. 2018- ம்ம் ஆண்டு ஊட்டச்சத்து மற்றும் நோய் பற்றிய ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, முந்திரி பருப்பு நுகர்வு HDL கொலஸ்ட்ராலை அதிகரித்தது டைப் 2 நீரிழிவு உள்ள ஆசிய இந்தியர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும. 12-வார சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையின் படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 300 பேரிடம் முந்திரி-செறிவூட்டப்பட்ட உணவு அல்லது வழக்கமான நீரிழிவு உணவை வழங்கப்பட்டது. இதன்பிறகு நடத்திய ஆய்வில், பருப்பு”உடல் எடை, கிளைசீமியாவில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் காட்டவில்லை.
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள், மக்காடமியா விதைகள், பெக்கன்கள், பிஸ்தா, பைன் விதைகள் மற்றும் கஷ்கொட்டை உள்ளிட்ட பொதுவான மர விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. மற்ற விதைகளுடன் ஒப்பிடும்போது முந்திரி கொழுப்பு குறைவாக உள்ளது. முந்திரிகளில் உள்ள கொழுப்பில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒலிக் அமிலமாகும், இது இதய ஆரோக்கியமான மோனோ-நிறைவுறா கொழுப்பு என்றும் அறியப்படுகிறது. ஒவ்வாமை பற்றி கவனமாக இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி எடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil