நீரிழிவு நோயாளிகள் எப்போதும் கட்டுக்கோப்பான உணவை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர். இது கார்போஹைட்ரேட் உணவுகளிலிருந்து விலகி இருப்பதைக் குறிக்கிறது.
ஆனால் உருளைக்கிழங்கை கைவிடுவது சாத்தியமா?
உருளைக்கிழங்கில் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது.
இருப்பினும், உங்கள் உணவில் இருந்து உருளைக்கிழங்கை முற்றிலுமாக நீக்க வேண்டியதில்லை. கவனமாக சமைப்பது மற்றும் போர்ஷனை கட்டுப்படுத்துவதன் மூலம், ஒருவர் இன்னும் உருளைக்கிழங்கை சாப்பிட முடியும், என்று டாக்டர் அசோக் எம் என் கூறினார். (consultant – internal medicine and diabetology, SPARSH Hospital, Bengaluru.)
தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து நிபுணர் சர்மைன் ஹா டொமிங்குஸ் (Charmaine Ha Dominguez) கருத்துப்படி, உங்களுக்கு டைப் 2 நீரிழிவு இருந்தால் உருளைக்கிழங்கை சாப்பிட மூன்று வழிகள் உள்ளன.
சமைத்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்கவும். இது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க ரெசிஸ்டன்ட் ஸ்டார்ட் அதிகரிக்க உதவுகிறது, என்று டொமிங்குஸ் கூறினார்.
ரெசிஸ்டன்ட் ஸ்டார்ட், நார்ச்சத்து போல செயல்படுகிறது, இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கில் வினிகரைச் சேர்ப்பது (குறிப்பாக மால்ட் வினிகர்) கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
வினிகர் அடிப்படையிலான டிரஸ்ஸிங் மற்றும் மரினேட் சேர்த்துக்கொள்வதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்கும் அதே வேளையில் உருளைக்கிழங்கின் சுவை மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.
ஏனென்றால், வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவுகளில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று டாக்டர் அசோக் கூறினார்.
முதலில் காய்கறிகள் மற்றும் புரதங்களை சாப்பிடுங்கள். இது உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரையை குறைக்க உதவும். புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து, முழுமையான உணர்வின் காரணமாக, கார்போஹைட்ரேட் நிறைந்த உருளைக்கிழங்கை குறைவாக உட்கொள்ள உதவும் என்று டாக்டர் அசோக் விளக்கினார்.
உருளைக்கிழங்கை அனுபவிக்க மற்ற வழிகள்
/indian-express-tamil/media/media_files/hC57bJPoRvMhEOC8MjII.jpg)
பாயிலிங் மற்றும் ஸ்டீமிங் முறைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளை தக்கவைக்க உதவுகின்றன, இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தோலுடன் உருளைக்கிழங்கை பேக் செய்வது அல்லது வறுப்பதும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும், ஏனெனில் தோலில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.
சரியான உணவு திட்டமிடல் மூலம் டைப் 2 நீரிழிவு நோயுடன் உருளைக்கிழங்கை அனுபவிப்பது முற்றிலும் சாத்தியமாகும்.
சரியான வகை உருளைக்கிழங்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், போர்ஷனை கட்டுப்படுத்துவதன் மூலம், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் இணைத்து, சமையல் முறைகளைப் பரிசோதிப்பதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் இந்த காய்கறியை நீங்கள் சுவைக்கலாம்.
டீப் ஃபிரைடு உருளைக்கிழங்கு, பிரெஞ்ச் ஃபிரைஸ் போன்றவற்றிலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன, இது ரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கும் என்று டாக்டர் அசோக் சுட்டிக்காட்டினார்.
Read in English: Here’s how to enjoy potatoes if you have type 2 diabetes
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“