நீங்கள் அறியாத சில வைட்டமின்கள் மற்றும் அதன் நன்மைகள்

எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

types and vitamins and its uses - நீங்கள் அறியாத சில வைட்டமின்கள் மற்றும் அதன் நன்மைகள்
types and vitamins and its uses – நீங்கள் அறியாத சில வைட்டமின்கள் மற்றும் அதன் நன்மைகள்

முறையான உணவுகள்தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவுகின்றன. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நீர் போன்ற ஊட்டச்சத்துகளை  உணவுகளின் வழியே நாம் பெறுகிறோம். இதைத் தவிர, நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சில சத்துக்களைப் பார்ப்போம்.

ஃபோலிக் ஆசிட் : குழந்தையின் டிஎன்ஏ வளர்ச்சிக்கும், ரத்த விருத்திக்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது.
இரும்புச்சத்து : உடல் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும்  பயன்படுகிறது.

வைட்டமின் D  : உடலுக்கு அவசியம் தேவைப்படும் இது, சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.
மெக்னீசியம் : தசை, நரம்பு, தோல் இவைகளுக்கு அவசியமானது.

வைட்டமின் E  : நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் அவசியமானது.
குறிப்பாக பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் கொழுப்பு இது.

வைட்டமின் C : தோல் வியாதிகள் வரமால் காக்கும் சத்து இது.
நார்ச்சத்து : இதயம் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சத்து இது.

வைட்டமின் ஏ: முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

வைட்டமின் பி: கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி’ குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

வைட்டமின் சி: ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.
வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

வைட்டமின் டி: வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் ஈ: கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையையும் உண்டாக்கும்.

வைட்டமின் எஃப்: வைட்டமின் எஃப் ஒரு சிக்கலானது, இதில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக லினோலிக், அராச்சிடோனிக் (இரண்டும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களைச் சேர்ந்தவை) மற்றும் லினோலெனிக் (ஒமேகா -3) ஆகியவை அடங்கும். கூடுதலாக, வைட்டமின் கலவையில் டோகோசாஹெக்ஸெனோயிக் மற்றும் ஈகோசாபென்டெனோயிக் அமிலங்கள் உள்ளன.

உடலில், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக சிறுநீரகங்கள், இதயம், மூளை, இரத்தம், கல்லீரல், தசைகள் ஆகியவற்றில் குவிகின்றன. குடல் சுவர் வழியாக உறிஞ்சப்பட்ட பிறகு, வைட்டமின் மேலே குறிப்பிட்ட உறுப்புகளுக்கு வழங்கப்படுகிறது, அங்கு அது அதன் செயல்பாடுகளை செய்கிறது.

கால்சியம்

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானர்கள் அவதிப்படுகின்றனர்.

உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருப்பது தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளாததும் ஒரு வகையில் காரணம் என்றாலும் எலும்பு தேயும் அளவிற்கு ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் புரோட்டின் பவுடரை சேர்த்து அருந்தினால், ஒரு நாளைக்கு தேவையான கால்சிய சத்தை பெறலாம்.

பொட்டாசியம்

மனிதர்களுக்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியம். அதுதான் சக்தி அளிக்கிறது. ஆனால் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் பெரும்பாலோனோர் அவதிக்குள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உருளைக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம் சத்துள்ளதால் இது மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு வகிப்பதை சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, காய்கறி, பழங்களிலேயே உருளை கிழங்குதான் ராஜா என்கின்றனர் ஆய்வாளர்கள். சமீப காலமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பொட்டாசியம் சத்து குறைபாட்டால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது.

ஒரு நாளைக்கு மனிதனுக்கு சுமார் 4700 மி.கி. பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்களுடன் ஒப்பிடும் போது உருளையில் இந்த சத்து அதிக அளவு உள்ளது மருத்துவர்களின் அறிவுரைப்படி இதை உண்ணலாம்

அதேபோல் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமுள்ளது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Types and vitamins and its uses

Next Story
’விட்டமின் டி’யின் சிறப்பும் அதன் தேவைகளும்!Vitamin-D, sun light, lifestyle
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com