ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பாக ப்ளூ விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு, 10 ஆண்டு கால வசிப்பிட அனுமதியை அளிக்கும். 2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பங்களித்த உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சுற்றுச்சூழல் பங்களிப்பாளர்களுக்கு நீண்ட கால விசா அளிப்பதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதன் நிலைத்தன்மை முயற்சிகளை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் பெறுநர்களுக்கு ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள ஒரே எண்ணம் கொண்ட நிபுணர்களின் வலையமைப்பிலும் அவர்களை ஒருங்கிணைக்கிறது.
கோல்டன் மற்றும் கிரீன் விசாக்கள் வரிசையில் ப்ளூ விசாவும் தற்போதுள்ள UAE வசிப்பிட திட்டத்தை நிறைவு செய்கிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பவர்களுக்கு இது வழங்கப்படவுள்ளது.
இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் இத்துறையில் உலகளாவிய தலைவர்களுடன் ஒத்துழைக்க அதன் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதி அளவுகோல்கள்:
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சங்கங்களில் உள்ளவர்கள் இதில் இடம்பெறுவார்கள்.
சுற்றுச்சூழல் பங்களிப்பிற்காக உலகளாவிய விருதுகளைப் பெற்றவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்.
சுற்றுச்சூழல் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் UAE நாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இருவரும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வருங்கால விண்ணப்பதாரர்கள் பின்வரும் படிநிலைகள் மூலம் ப்ளூ விசாவை பெறலாம்:
நியமனக் கோரிக்கை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது குடியுரிமை, அடையாளம் போன்றவற்றுடன் UAE அதிகாரிகளிடமிருந்து பரிந்துரையை பெறலாம்.
ஆவணச் சமர்ப்பிப்பு: தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தொடர்புடைய சாதனைகள் உட்பட குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பங்களிப்புகளின் சான்றுகளை வழங்கவும்.
விசா விண்ணப்பம்: நியமனத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, ICP தளத்தின் மூலம் வசிப்பிட விசா விண்ணப்பத்தைத் தொடரவும்.
சுற்றுச்சூழல் முன்னோடிகளை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.