எங்க பேமிலில ரூல்ஸ் கிடையாது… உதய்-க்கும் அது பிடிக்காது; கிருத்திகா ஓபன் டாக்

கிருத்திகா உதயநிதி, 2002 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

கிருத்திகா உதயநிதி, 2002 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Udhayanidhi Stalin wife Kiruthiga

Udhayanidhi Stalin wife Kiruthiga Family

திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் கிருத்திகா உதயநிதி. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகள் என்ற அடையாளங்கள் அவருக்கு இருந்தாலும், தனது தனித்திறமையால் தனக்கான பாதையை வகுத்துக் கொண்டவர்.

கிருத்திகா உதயநிதி, 2002 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர். தனது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல், ஆதரவாக இருக்கும் பெற்றோராக உதயநிதி-கிருத்திகா தம்பதியினர் திகழ்கின்றனர்.

Advertisment

'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி, பின்னர் 'காளி', மற்றும் 'காதலிக்க நேரமில்லை' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட குறும்படங்களையும், இசைக் காணொளிகளையும் இயக்கி சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கிய இதழான 'இன்பாக்ஸ் 1305' இன் ஆசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கிருத்திகா உதயநிதி, தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

Advertisment
Advertisements

என் குடும்பத்துல ரூல்ஸ் எல்லாம் கிடையாது. வெளியே போகணும்னா போகலாம். அந்த மாதிரி ஒரு ரூல்ஸை நாங்களும் ஃபாலோ பண்ண மாட்டோம், எங்க பசங்களும் ஃபாலோ பண்ண மாட்டாங்க. அது யாருக்குமே ஒத்து வராது.

நாங்க என்ன பண்ணணும்னு நினைக்கிறோமோ, அதை பண்ணுவோம். பயங்கரமா தனிப்பட்ட சுதந்திரம் கொடுப்போம். ஒருத்தர் ஒரு விஷயத்தை வேண்டாம்னு சொன்னா, 'சரி ஓகே, அது உன் இஷ்டம்'னு பசங்ககிட்டயே விட்டுடுவோம். நானும் உதயநிதியும் அப்படித்தான்”, என்று கிருத்திகா அந்த பேட்டியில் கலகலவென்று பேசினார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: