ஒரு முறை, இப்படி உடுப்பி ஸ்டைல் தக்காளி தொக்கு, செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணை 4 ஸ்பூன்
1 கை பிடி பூண்டு
10 தக்காளி நறுக்கியது
10 தக்காளி அரைத்தது
7 முந்திரி பருப்பு
1 கொத்து கருவேப்பிலை
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் வெந்தயம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, பூண்டு சேர்க்கவும். தொடர்ந்து அதில் தக்காளி நறுக்கியதை சேர்க்கவும், தொடர்ந்து அரைத்த தக்காளியை சேர்க்கவும், இதில் மஞ்சள் போடி, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து அரைத்துகொள்ளவும். இதை தொக்கில் சேர்க்கவும்.