3 மாதம் இலவச கேஸ்: மத்திய அரசின் ‘உஜ்வாலா’ திட்டத்தில் இணையும் முறை தெரியுமா?

Ujjwala Yojana Tamil News: இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு 3 மாதம் இலவச எரிவாயு திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

Pradhan Mantri Ujjwala Yojana Scheme: கொரோனா நிவாரணமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து 3 மாதம் இலவச கேஸ் திட்டத்தை வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் நீங்கள் இணைந்து விட்டீர்களா? இணைவதற்கான சுலப வழிகள் இங்கே…

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதன்மைத் திட்டமான Prime Minister Ujjwala Yojana (PMUY) வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


80 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட 7 மாதம் முன்னரே செப்டம்பர் 9 ஆம் தேதி பிரத மந்திரி நரேந்திர மோடியே நேரடியாக 80 மில்லியனாவது இலவச சமயல் எரிவாயு இணைப்பை அவுரங்காபாத்தை சேர்ந்த ஆயிஷா ஷேக் ரபீக் என்ற பயனாளிக்கு வழங்கினார்.

மிக பிரபலமான இந்த திட்டத்தால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 1.46 கோடி குடும்பங்கள், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 88 லட்சம் குடும்பங்கள், பிகாரைச் சேர்ந்த் 85 லட்சம் குடும்பங்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 71 லட்சம் குடும்பங்கள் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 63 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.

மோடி அரசு ஊரகப் பகுதிகளில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மத்தியில் மிக பிரபலமடைய முக்கிய காரணமான இந்த திட்டத்தின் முழு பயனையும் ஒருவர் அடைவது எப்படி என்பதை பார்ப்போம்.

Ujjwala Yojana திட்டத்தின் பயனை யார் பெறலாம்?

அனைத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களும் இந்த திட்டத்தில் பயனடையலாம். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்படும்.

சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத, அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (SC/STs) குடும்பங்கள், Pradhan Mantri Awas Yojana (PMAY) (Gramin) மற்றும் Antyoday Anna Yojana (AAY) திட்ட பயனாளிகள், வனவாசிகள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (MBC), தேயிலை தோட்ட பழங்குடியினர் மற்றும் தீவுகள்/ ஆற்றில் உள்ள தீவுகளில் வாழ்பவர்கள் இந்த திட்டத்தில் உள்ளடங்குவர்.

இந்த திட்டத்துக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த எந்த பெண்மணியும் வைப்புத் தொகை இல்லாத இந்த சமயல் எரிவாயு இணைப்புக்கு Ujjwala திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அந்த வீட்டில் உள்ள எந்த உறுப்பினர் பெயரிலும் சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்ற ஒரே நிபந்தனையின் அடிப்படையில்.

விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது அந்த பெண்மணி விரிவான முகவரி, Jan Dhan வங்கி கணக்கு மற்றும் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை செயலாக்கிய பிறகு எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் (Oil Marketing Companies) தகுதியான பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.

திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அட்டை (BPL Card)

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஆதார்/ வாக்காளர் அடையாள அட்டை)

Passport அளவு புகைப்படம்

ரேசன் அட்டை நகல்

LIC Policy

Jan Dhan Account statement

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள பயனாளியின் பெயர் அடங்கிய நகல் (Copy of Socio Economic Caste Census Data 2011 having the applicant name)

அண்மையில் கொரோனா பாதிப்பையொட்டி இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு 3 மாதம் இலவச எரிவாயு திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இது இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close