அல்சர் தொடர்பான பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது. வயிற்றில் புண், சாப்பிட்டவுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அடிக்கடி பசி எடுத்தல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர்.
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை 8 வகையான அல்சர் இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக உடல் உஷ்ணத்தையும், வயிற்று பகுதியில் இருக்கும் புண்களையும் ஆற்றக் கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதற்காக நீர்ச்சத்து இருக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, வெள்ளைப் பூசணிக்காய் சாப்பிடலாம். காலை நேரத்தில் வெள்ளைப் பூசணிக்காயை சாறு எடுத்து 100 மி.லீ அளவிற்கு குடிக்கலாம்.
இதேபோல், அதிமதுரம் கசாயம் குடிக்கலாம். அரை ஸ்பூன் அதிமதுரத்துடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க வைத்து குடிக்கலாம். இந்தக் கசாயம் வயிற்றுப் பகுதியில் உள்ள புண்களை ஆற்றிவிடும்.
முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை நீங்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இளநீருடன் நன்னாரி மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை ஊறவைத்த தண்ணீரை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் அல்சர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.