அதீத பதப்படுத்தப்பட்ட உணவால் சர்க்கரைநோய் ஆபத்து – புதிய ஆய்வில் பகீர்!

இந்த ஆய்வுக் காலத்தில் 821 பேருக்கு சர்க்கரை நோய் உருவானது, கண்டறியப்பட்டது.

Diabetes prevention
Diabetes prevention

இயற்கையான உணவுவகைகளைவிட அதீதமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளை மிகுதியாக உண்பவர்களுக்கு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

ரொம்பவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடலின் சர்க்கரை, கொழுப்பு, வெற்று கலோரியை அதிகரிக்கின்றன. இப்படியான உணவுகளை கண்டபடி எடுத்துக்கொள்வதால் பல நலக்கோளாறுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சும்மா இல்லை, இதய நோய், மிகை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் கூடுகை, உடல்பருமன் மற்றும் குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

எடைபோடுவதுடன் தொடர்புடையதும் பரவலாகக் காணப்படுவதுமான இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கும் இந்த உணவுகளுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கான சான்று, இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களில், ஒரு இலட்சம் பேரில் 166 பேருக்கும், இவ்வுணவுகளை குறைவாக உண்போருக்கு ஒரு இலட்சத்துக்கு 116 பேருக்கும் சர்க்கரை நோய் சாத்தியம் உள்ளது.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த இந்த கணக்காய்வின் தலைமை எழுத்தாளர் பெர்னார்டு சுரூரும் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூத்த எழுத்தாளர் மாத்தைல்டு டூவியரும் இவ்வாய்வில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆய்வு குறித்துப் பேசுகையில், “ அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளவேண்டும்; பதப்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பக்கம் திரும்பவேண்டும். உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை குறைவாகவும் அடர்த்தியான ஆற்றலும் கொண்ட சத்தான ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான குணங்களைப் பேணுவது அவசியம் என மக்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்” என்கின்றனர், இருவருமே!

குறிப்பாக, சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்க விரும்புவோர், அடர்கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையறா, சோடா மற்றும் பிற சர்க்கரைபானங்களை மட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர், சுரூரும் டூவியரும்.

பாலடைக்கட்டி, காய்கறிகள், முழுதானியங்கள், பயறுவகைகளைச் சாப்பிடுவது, சர்க்கரைநோய் வாய்ப்பைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வுக்காக, சர்க்கரைநோய் இல்லாத 1,04,000 பேரின் விவரங்களை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்தனர். ஆய்வு தொடங்கியபோது இவர்களின் சராசரி வயது 43. இவர்களில் பெரும்பாலானவர்களை குறைந்தது தொடர்ந்து, ஆறு ஆண்டுகளாவது ஆய்வாளர்கள் கவனித்துவந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் 17 சதவீதம் பேர் அதீத பதப்படுத்தப்பட்ட உணவு உண்போர். இந்த வகை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டவர்கள், மொத்தமாக மிக அதிகமான கலோரியையும் தரம்குறைந்த உணவுகளை உட்கொள்பவர்களாகவும் பருமன்கொண்டவர்களாக மந்தமானவர்களாகவும் மாறிப்போனார்கள்.

இந்த ஆய்வுக்காலத்தில் 821 பேருக்கு சர்க்கரை நோய் உருவானது, கண்டறியப்பட்டது. அதீத பதப்படுத்தப்பட்ட உணவின் அளவை அதிகரித்துள்ளவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் என்றால், அவர்களில் சர்க்கரைநோய் வரக்கூடிய சாத்தியம் அதிகமுள்ளவர்கள் 15 சதவீதம் என அந்த ஜமா உள்நிலை மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றச் சிக்கல்கள், மக்களின் உணவுமுறையின் தரம் ஆகியவை குறித்து ஆய்வாளர்கள் என்னதான் கணக்கில்கொண்டாலும், அ.ப. உணவுகளுக்கும் சர்க்கரைநோய்க்கும் உள்ள தொடர்பு நீடித்தது. இந்த ஆய்வானது, அ.ப. உணவுகள், நேரடியாக சர்க்கரைநோய்க்கு காரணமாக அமைகின்றனவா, எனில் எப்படி என்பதைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்கிறார் சுரூர்.

ஆலையின் பதப்படுத்தலும் வேதிமங்களின் சேர்க்கையும் உணவின் செல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் அளவுக்கு அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

சர்க்கரைநோயுடைய சில பங்கேற்பாளர்கள் மேற்கொண்டு அவர்களின் நோய்நிலையைக் கண்டறியமுடியாதபடி போய்விட்டதால், அந்த வகையினரின் எண்ணிக்கை குறைந்துபோவதற்கான வாய்ப்பு என்பது இந்த ஆய்வின் ஒரு மட்டுப்படுத்தல் ஆகும்.

ஆனாலும்கூட, அ.ப. உணவுகள் உடல்நலச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்த முடிவுகள் சான்றுகள் ஆகியுள்ளன என்கிறார், இந்த ஆய்வில் பங்கேற்காத ஆஸ்திரேலியா டீக்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரிசில்லா மச்சாடோ.

” உட்கொள்ளும் அளவை அதிகரிக்கத் தூண்டுவது, முழுமையான தானியம், காய்கள், கனிகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளையும் அவற்றால் ஏற்படும் வசதி, எளிதாகக் கிடைப்பது, வாங்கும் சக்தி, அதிகமான கொள்ளளவு, சந்தை விரிவாக்கம், இவ்வகை உணவுகளுக்கான மேம்பாடு ஆகியவற்றையும் விலக்கிவைப்பது ஆகிய குறிப்பான தன்மைகளை அதீதப் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் கொண்டுள்ளன” என்று மின்னஞ்சல் மூலம் நம்மிடம் தெரிவித்தார், மச்சாடோ.

எப்படியாக இருந்தாலும், அ.ப. உணவுகளைத் தவிர்ப்பதற்கான நேரமும் வாய்ப்புகளையும் கொண்டவர்களுக்கு அதைக் கண்டறிவது முற்றிலும் எளிதானது.

“ அ.ப. உணவுகளைக் கண்டறிவதற்கு, அதன் உட்பொருட்களைப் பட்டியலிட்டு சோதிக்கலாம்” என்பது மச்சாடோவின் அறிவுரை.
“ எந்த பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருளிலும், அதில் கலந்துள்ள உட்பொருள்களின் பட்டியல் நீண்டதாக, அதுவும் ஒரே வேதிமப்பொருட்களாக இருந்தால், பெரும்பாலும் அது, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருளாக இருப்பதற்கான தெளிவான அடையாளம்” என்கிறார் அவர்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – Ultra-processed foods linked to diabetes risk: Study

தமிழில் மொழி பெயர்த்தவர் – தமிழ்க்கனல்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ultra processed foods caused to diabetes risk

Next Story
யூடியூப் பயன்படுத்தி 184 கோடி சம்பாதித்த 8 வயது சிறுவன்8-year-old Ryan Kaji tops YouTube list of high earners with $26 million - யூடியூப் பயன்படுத்தி 184 கோடி சம்பாதித்த 8 வயது சிறுவன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express